தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறனுக்கு அமிதாப் பச்சன் சொன்ன ஆறுதல் – விவரம் இதோ

Amitabh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அதோடு மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மிட்சல் ஸ்டார்க் அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிக்கு பின்னர் மைதானம் முழுவதும் வலம்வந்த ஷாருக்கான் மைதானம் முழுவதும் இருந்த தங்களது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு மைதானத்தில் இருந்த அனைத்து வீரர்களிடமும் கட்டி அணைத்து உரையாடிக் கொண்டிருந்தார்.

ஒருபுறம் இப்படி ஷாருக்கான் மகிழ்ச்சியில் இருக்க மற்றொருபுறம் காவியா மாறன் சோகத்தில் ஆழ்ந்தார். இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் அணியானது இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய போது அந்த வருத்தத்தை தாங்க முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

- Advertisement -

மேலும் கேமராவிற்கு தெரியாதபடியும் திரும்பிக்கொண்டார். இந்நிலையில் காவ்யா மாறனின் வலியை உணர்ந்த அமிதாப் பச்சன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டது. கே.கே.ஆர் அணி மிகவும் உறுதியாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர். ஹைதராபாத் அணி இன்று தோல்வியை தழுவி விட்டது.

இதையும் படிங்க : இப்படி ஒரு அதிசயத்தை இனிமே எந்த ஜென்மத்திலேயும் பாக்க முடியாது – மிரளவைத்த சம்பவம்

ஆனால் கடந்த கால போட்டிகளில் அந்த அணி சிறப்பாகவே இருந்தது. ஸ்டேடியத்தில் காவ்யா மாறன் அழுததை பார்த்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் நாளையும் மற்றொரு நாள்தான். தைரியமாக இருங்கள் என அவருக்கு அமிதாப் பச்சன் தைரியம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement