நானா இருந்தா சுப்மன் கில்லை கேப்டனா போட்ருக்க மாட்டேன்.. காரணம் இது தான்.. அமித் மிஸ்ரா விளாசல்

Amit Mishra
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் விளையாடிய அந்த தொடரில் பெரும்பாலான சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா விளையாடியது.

அவருடைய தலைமையில் முதல் போட்டியிலேயே 116 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய இந்தியா அடுத்த 4 போட்டிகளில் 4 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று கோப்பையை வென்றது. முன்னதாக அந்த தொடரில் சுயநலமாக நடந்து கொண்ட கேப்டன் சுப்மன் கில் மீது ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

- Advertisement -

சுமாரான கேப்டன்:
ஏனெனில் கேப்டனாக பொறுப்புடன் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இளம் வீரரான அபிஷேக் சர்மாவுக்கு அவர் கொடுக்கவில்லை. அதே போல 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலை சதத்தை நெருங்க விடாமல் செய்த அவர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். ஆனால் இளம் வயதிலேயே இவ்வளவு சுயநலமாக இருக்காதீர்கள் என அவரை ரசிகர்கள் விளாசினர்.

இந்நிலையில் தாமாக இருந்தால் சுப்மன் கில்லை ஜிம்பாப்வே தொடரில் கூட கேப்டனாக நியமித்திருக்க மாட்டேன் என்று முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை நான் கேப்டனாக போட்டிருக்க மாட்டேன். இந்த ஐபிஎல் தொடரை பாருங்கள். குஜராத் அணியில் எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை”

- Advertisement -

“இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது. கடந்த சில ஐபிஎல் தொடர்களில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கும் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கேப்டனாக அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்திய அணி நிர்வாகம் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கலாம்”

இதையும் படிங்க: விராட், ரோஹித் இடத்தை நிரப்புவது ஈஸியில்லை.. அந்த 2 பேர் தான் இந்தியாவின் வருங்காலம்.. விக்ரம் ரத்தோர்

“ஆனால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட போது அவரிடம் தலைமை பண்புகள் வெளிப்படவில்லை. ஐபிஎல் தொடரில் எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. கேப்டன்ஷிப் பற்றிய ஐடியா கூட அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியில் இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை கேப்டனாக நியமிக்க கூடாது” என்று கூறினார்.

Advertisement