நான் டாப் பார்மில் இருக்கும்போதே என்னை அணியில் இருந்து தூக்கி வீசினார்கள் – இந்திய வீரர் வேதனை

Raina
- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன்பின்னர் இந்திய அணிக்காக இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளையும் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் இவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுமார் 14 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடினாலும் குறைவான போட்டிகளிலேயே அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் அறிமுகமான காலத்தில் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் போன்ற ஜாம்பவான் ஸ்பின்னர்கள் இருந்ததால் இதனால் ரிஸ்ட் பின்னரான இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தற்போது இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அமித் மிஸ்ராவுக்கு வயதாகிவிட்டது.

Mishra

இந்நிலையில் தற்போது தான் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்பதனை எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன். என்னுடைய சாதனை புள்ளிவிவரங்களுக்கு ஒருவருமே பதிலளிக்கவில்லை.

- Advertisement -

யாராவது ஒருவர் காயத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதில் நான் விளையாடுவேன். காயத்தில் இருந்து அவர் மீண்ட பின் அவர் அணிக்கு திரும்ப வேண்டும் என்ற போது நான் வெளியேற்றப்பட்டேன் இதுவே நிர்வாகத்தின் மீது முறையாக இருந்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் சஹா காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்குத் திரும்பினார்.

Mishra 1

எனக்கு ஏன் அப்படி நிகழவில்லை என்று எனக்கு தெரியவில்லை நான் சிறப்பான பார்மில் இருக்கும்போது கூட மற்றவர்கள் யாராவது நீக்கப்பட்டால் மட்டுமே அணியில் இணையும் ஆளாக இருந்தேன். மேலும் அவர்கள் உள்ளே நுழையும் போது என்னை வெளியேற்றுவார்கள் என்று வேதனையுடன் மிஸ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement