உண்மையா அவருக்குத் தான் பெரிய மனசு.. 10 வருட பிரச்சனையை முடிச்சு வெச்சுட்டாரு.. அமித் மிஸ்ரா பேட்டி

Amit Mishra 2
- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இந்தியாவின் மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர். அதில் 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த கௌதம் கம்பீர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே போல விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலாக விளையாடி வருகிறார்.

குறிப்பாக சச்சினுக்கு பின் அதிக ரன்கள் மற்றும் 80 சதங்கள் அடித்து அசத்தி வரும் அவர் இந்தியாவின் வெற்றி நாயகனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அப்படி ஒரே மாநிலத்தில் பிறந்து நாட்டுக்காக விளையாடிய அந்த இருவரும் 2013 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சண்டையிட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற பின் கௌதம் கம்பீர் வர்ணனையாளராக விராட் கோலியை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

- Advertisement -

பெரிய மனசு:
அந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் செயல்பட்டார். அப்போது தமது அணி வீரர் நவீன்-உல்-ஹக்கிடம் வாக்குவாதம் செய்த விராட் கோலியிடம் 10 வருடங்கள் கழித்து ஆலோசகராக கௌதம் கம்பீர் சண்டையிட்டார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் அதற்கு கௌதம் கம்பீர் முற்றுப்புள்ளி வைத்தார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் இந்த வருடம் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்ட அவர் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தண்ணீர் இடைவெளியின் போது களத்திற்கு சென்று அரை சதமடித்த விராட் கோலியை வாழ்த்தி கட்டிப்பிடித்து பாராட்டினார். இந்நிலையில் சீனியர் என்ற முறையில் விராட் கோலி தான் தாமாக சென்று கௌதம் கம்பீரிடம் பேசி பிரச்சினையை முடித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் கௌதம் கம்பீர் பெரிய மனதுடன் சண்டையை மறந்து நட்பு பாராட்டியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீரின் நல்ல குணத்தை நான் பார்த்தேன். விராட் கோலி அவரிடம் செல்லவில்லை. கம்பீர் தான் விராட் கோலியிடம் சென்றார். அவரிடம் சென்ற கம்பீர் எப்படி இருக்கிறீர்கள் உங்களுடைய குடும்பம் எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்தார்”

இதையும் படிங்க: 4 வருசம் விளையாடியப்போ நேரில் பாத்தேன்.. ஆர்சிபி கோப்பை ஜெயிக்காததுக்கு இது தான் காரணம்.. பார்திவ் படேல்

“அந்த வகையில் கம்பீர் தான் பிரச்சனையை முடித்தார். விராட் கோலி அல்ல. எனவே அந்த நேரத்தில் கம்பீர் பெரிய இதயத்தை காட்டினார். உண்மையில் விராட் கோலி தான் கம்பீர் பாய் “இதை முடித்துக் கொள்வோம்” என்று சொல்லி அந்த பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பீருடன் இணைந்து விராட் கோலி செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement