தோனியை கிண்டல் செய்த பாக் ஆர்வலர். தக்க பதிலடி கொடுத்து தரமான செயலை செய்த – அமித் மிஸ்ரா

Amit Mishra
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தற்போது ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடி வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான அந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி முதல் நாள் அன்று 506 ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி மொத்தம் நான்கு வீரர்கள் சதம் அடிக்க முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 657 ரன்களை குவித்தது.

பின்னர் தொடர்ந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 499 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பிலும் இந்த போட்டியில் மூன்று வீரர்கள் சதம் அடித்துள்ளனர். இப்படி ஒரே டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸ் கூட முடிவடையாத வேளையில் ஏழு வீரர்கள் சதம் அடித்துள்ள இந்த ராவல்பிண்டி பிட்ச் தார் ரோடு போல உள்ளதாக இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ பேட்ஸ்மேன்களை காப்பாற்றுவதற்காக தான் இதை போன்ற பிளாட் பிட்ச்களை தயார் செய்வதாக சொல்லி சமாளித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் ராவல்பிண்டி மைதானத்தை கிண்டல் செய்து வரும் வேளையில் பாகிஸ்தான் விமர்சகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து தான் தற்போது அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் :

ஆசிய மைதானங்களை கடந்து இந்திய கேப்டன் தோனியை விட பாகிஸ்தானின் பவுலரான யாஷிர் ஷா அதிக சதங்களை விலாசியுள்ளார். எனவே பிளாட் பிட்ச்களை பற்றி நீங்கள் பேசத் தேவையில்லை என அவர் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த கருத்து தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய கோபத்தை எழுப்பவே அவருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தோனியுடன் விளையாடிய அமித் மிஸ்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனியை ஆதரித்து அந்த பாகிஸ்தான் ஆர்வலரை சாடியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : பாகிஸ்தான் அணி ஐசிசி நடத்திய மூன்று விதமான கோப்பைகளையும் கைப்பற்ற மூன்று கேப்டன்கள் தேவைப்பட்டனர். அதோடு அதனை சாதிக்க 24 நாள் ஆண்டுகளும் தேவைப்பட்டது.

இதையும் படிங்க : என்ன ப்ரோ என்ன ஆச்சு? முகமது ஷமியை மனசாட்சியின்றி கலாய்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் – காரணம் இதோ

ஆனால் தோனி இவை அனைத்தையுமே ஒரே கேப்டனாக வெறும் ஏழு ஆண்டுகளுக்குள் செய்து காட்டியவர். அவரைப் பற்றி நீங்கள் பேசத் தேவையில்லை என்று அந்த பாகிஸ்தான் விமர்சகரை விளாசி தனது பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement