28 வயதிலேயே நான் ஓய்வை அறிவிக்க இவர்கள் 2 பேரே காரணம் – முகமது அமீர் வைத்த பகிரங்க குற்றச்சாட்டு

Amir

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேல்-ஷெல் எனும் பாகிஸ்தான் இணைய தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் : நான் கிரிக்கெட்டில் இருந்து விலக இதுதான் சரியான நேரம். ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை மனரீதியாக மிகவும் டார்ச்சர் செய்கிறார்கள். அந்த டார்ச்சரை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

amir

மேலும் தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது. ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு என்னால் முடிந்தளவு சிறப்பான பங்களிப்பை செய்து உள்ளேன். ஆனால் ஒவ்வொரு மாதமும் என்னுடைய பந்து வீச்சு குறித்து ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் என் மீது ஏதோ குற்றம் சாட்ட வேண்டும் என்று சில செயல்களை செய்கிறார்கள்.

தற்போது நான் இலங்கையில் இருக்கிறேன். பாகிஸ்தான் வந்தபின் மற்ற விவரங்களை தெரிவிப்பேன் என்று அமீர் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது வெளியாகி உள்ள மற்றொரு வீடியோ வீடியோவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Misbah

இதுகுறித்து அவர் கூறுகையில் : அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் இருவரும் தான் என் பெயரை கெடுக்க வேண்டும் என்று சில செயல்களை செய்து வருகின்றனர். மேலும் என் மீது அவப்பெயரை உண்டாக்கும் எண்ணத்திலும் அவர்கள் நடந்து கொள்வதால் அதன் காரணமாகவே நான் ஓய்வு அறிவித்தேன். பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டு டி20 லீக் கைகளில் விளையாட விரும்புகிறேன் என்று என்னை வார்த்தையால் வதைத்தனர்.

- Advertisement -

Younis

அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் எனக்கு ஒரு அவப்பெயர் உண்டாகும் வகையில் தோற்றத்தை கட்டமைத்தனர். இது படிப்படியாக குறையும் என்று நான் நினைத்த வேளையில் என்னுடைய பந்து வீச்சுக்கு எதிராக அவர்களது குறைபாடு அதிகம் ஆகிக்கொண்டே சென்றது. இதன் காரணமாகவே நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன் என்று அமீர் கூறியது குறிப்பிடத்தக்கது.