இந்திய பவுலரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்துவார் – மே.இ ஜாம்பவான் ஆம்புரோஸ் நம்பிக்கை

Ambrose
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்று நாம் கூறினாலே நினைவுக்கு வருவது மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் தான். ஏனெனில் கிட்டத்தட்ட 7 அடி உயரத்தில் நல்ல திடமான வேகப்பந்து வீச்சாளர்கள் 1980 முதல் 2000 வரை சர்வதேச கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்தனர். அவர்களில் குறிப்பாக ஆம்புரோஸ், வால்ஸ், பெஞ்சமின் உட்பட பல வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டை ஆட்டிப் படைத்து வந்தனர். அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் ஆம்புரோஸ் தனது பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Curtly Ambrose

- Advertisement -

வாலஸ் உடன் இணைந்து அவர் வீசிய ஓவர்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்ப்ரோஸ் 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும் 225 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்

நவீன கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த பவுலராக ஜஸ்பிரித் பும்ரா திகழ்கிறார் என்று அவர் பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த தகுதியான ஒரு பவுலர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பும்ராவின் தீவிர ரசிகர். இந்திய அணியில் பல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் பும்ராவின் பந்துவீச்சை தனியாக கவனித்து வருகிறேன்.

ambrose 1

அவரது செயல்பாடு மிக தனித்துவமாக இருக்கிறது. அவரது பந்துகள் கணிக்க முடியாமல் இருக்கின்றன. அதுமட்டுமின்றி பந்தை நல்ல முறையில் ஸ்விங் செய்தும், சரியான வேகத்திலும் வீசுகிறார். நிச்சயம் அவர் உடல் தகுதியை அப்படியே வைத்திருந்தால் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மேலும் தொடர்ந்து பேசிய அவர் மற்ற பந்துவீச்சாளர்களை போல் பும்ரா அதிக தூரம் ஓடி வந்து பந்து வீசுவது கிடையாது.

Bumrah

குறுகிய ஓட்டத்திலேயே நல்ல வேகத்தை அவர் உருவாக்குகிறார். இதன் காரணமாக அவர் கை அசைவுகள், கால் அசைவுகள் ஆகியவை சற்று வித்தியாசமாக இருந்தாலும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். பும்ரா இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement