இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2019 வரை 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் இடம் பிடித்து விளையாடி உள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள அவர் 204 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 22 அரைசதம் என 4348 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
நான் சந்தித்த கடினமான பவுலர் : அம்பத்தி ராயுடு
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இரண்டு அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலுமே விளையாடியுள்ள அவர் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற போது அந்த அணிகளில் இருந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 2013,2015,2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் 2018,2021,2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்காகவும் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் அவர் இடம் பிடித்திருந்தார். ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்தவரை மிக முக்கியமான வீரராக செயல்பட்டு வந்த அவர் கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்ற பிறகு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் முன்னாள் வீரர் ஒருவர் உங்களுடைய ஐபிஎல் கிரிக்கெட் கரியரில் நீங்கள் சந்தித்த கடினமான பவுலர் யார்? என்ற கேள்வியை முன் வைத்தார்.
அதற்கு பதிலளித்த அம்பத்தி ராயுடு கூறுகையில் : என்னுடைய ஒட்டுமொத்த ஐ.பி.எல் கரியரில் நான் சந்தித்த கடினமான பவுலர் என்றால் அது சுனில் நரைன் தான். அவர் எனக்கு அதிகம் தொந்தரவு செய்த ஒரு பந்துவீச்சாளர். அவரது பந்தை நான் கணிக்கவே முடியவில்லை. சரியான வார்த்தையை சொல்ல வேண்டுமென்றால் அவரை அட்டாக் செய்து ஆட வேண்டும் என்று நான் முயற்சிக்கும்போது அவர் எந்த பக்கம் பந்தை திருப்புகிறார் என்று தெரியவில்லை.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் – ரோஹித் சர்மாவின் நிலை என்ன?
நான் ஒரு பக்கமாக பந்து வரும் என்று கணித்தால் பந்து இன்னொரு பக்கமாக செல்லும். என்னுடைய கரியரின் இறுதிவரை அவர் மிகவும் கடினமான பவுலராகவே இருந்தார் என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.



