தமிழக வீரர் ஷாருக்கான் விடயத்தில் குஜராத் அணி இந்த முடிவை எடுத்தே ஆகனும் – அம்பத்தி ராயுடு பேச்சு

Rayudu and Shahrukh Khan
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரரான ஷாருக்கான் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 56 போட்டிகளில் விளையாடி 21.2 சராசரியுடனும், 148 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 736 ரன்கள் குவித்துள்ளார். ஆரம்பத்தில் பஞ்சாப் அணிக்காக அண்ட் கேப்டு வீரராக 9 கோடி ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக ஏலத்தில் பங்கேற்ற அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்து பினிஷராக மாற்றி விளையாட வைத்து வந்தது.

ஷாருக்கான் இடம் குறித்து குஜராத் யோசிக்கனும் : அம்பத்தி ராயுடு

குஜராத் அணியில் அவரது செயல்பாடு ஓரளவு சிறப்பாக இருக்கவே கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் நான்கு கோடி ரூபாய் என்கிற விலைக்கு குஜராத் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த சில சீசன்களாக பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

கடைசியாக நடைபெற்று முடிந்த போட்டியிலும் அவரது செயல்பாடு பெரிய அளவில் திருப்திகரமாக அமையவில்லை. தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வரும் அவருக்கு பதிலாக வேறொரு வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்களும் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஷாருக்கானின் இடம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கூறியதாவது :

கடந்த சில சீசனங்களாகவே ஷாருக்கான் மீதான எதிர்பார்ப்பு குறித்து பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பாடு திருப்திகரமாக இல்லை. குஜராத் அணி அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளது. அதற்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார். ஆனாலும் குஜராத் அணி சீக்கிரம் அவருடைய இடத்திற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு வரவேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : துவக்க வீரராக களமிறங்கியது ஏன்? தோல்விக்கு பிறகு பேசிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

ஏனெனில் அவர் கடந்த சீசனை விட முன்னேற்றம் அடைந்துள்ளாரா? அல்லது இன்னும் அவரது செயல்பாடு மோசமாக மாறுகிறதா? என்பதை பார்த்து அவரிடம் மேம்பாடு இல்லையெனில் வேறொரு வீரரை அந்த இடத்தில் விளையாட வைக்க யோசிக்க வேண்டும் என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement