தோனிக்கு அப்புறம் இந்த விஷயத்தை பாத்தா தினேஷ் கார்த்திக் தான் டேஞ்சர் – அம்பத்தி ராயுடு கருத்து

Rayudu
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெறும் முடிவுடன் இந்திய அணியின் வீரரும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சேர்ந்த பேட்ஸ்மேனேனான தினேஷ் கார்த்திக் முடிவாக இருக்கிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி கோப்பையை வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்ற கனவோடு ஒவ்வொரு போட்டியிலுமே அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை அவர் என்னதான் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பெங்களூரு அணி தொடர் தோல்விகளையே சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இதுவரை பெங்களூரு அணி விளையாடிவுள்ள 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பத்தாம் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் இனி வரும் அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற முடியும் என்கிற கடினமான சூழ்நிலையில் தற்போது பெங்களூரு அணி சிக்கித் தவிக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பு முடிவடையும் தருவாயில் இருந்தாலும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் இன்றளவும் அந்த அணிக்கு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத் போட்டியின் போது கூட பெரிய இலக்கினை துரத்திய பெங்களூரு அணி 262 ரன்கள் வரை துரத்தி போராட்டத்தை அளித்திருந்தது. அதிலும் குறிப்பாக அந்த போட்டியில் விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 சிக்ஸர் 5 பவுண்டரி என 85 ரன்கள் விரைவாக எடுத்து பெரிய அளவில் உதவி இருந்தார். இந்நிலையில் அந்த சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக்கின் இன்னிங்சை பாராட்டியுள்ள முன்னாள் சி.எஸ்.கே வீரரும் முன்னாள் இந்திய வீரருமான அம்பத்தி ராயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : டெத் ஓவர்களில் பேட்டிங் செய்வதில் தோனிக்கு பிறகு இரண்டாவது ஆபத்தான பேட்ஸ்மேன் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். ஏனெனில் அவர் லோயர் ஆர்டரில் களமிறங்கி விளையாடுகிறார். அதோடு நிலைத்து நின்று விளையாட நேரம் கிடைக்காத வேளையில் இறங்கிய உடனே ஷாட்டுகளை விளையாட வேண்டிய கட்டாயம் அந்த இடத்தில் இருக்கும். அதனையும் பொருட்படுத்தாமல் தினேஷ் கார்த்திக் களத்திற்கு சென்ற உடனே அடித்து விளையாடுகிறார்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி டீம் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கணும்னா இதுமட்டும் தான் வழி – மனோஜ் திவாரி பேட்டி

என்னை பொறுத்தவரை டெத் ஓவர்களில் ரன் அடிப்பதில் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் தோனி முதன்மை என்றால் நிச்சயம் அவருக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவரது பேட்டிங் அனுபவத்தை வைத்து டி20 உலக கோப்பையில் கூட அவரை தேர்வு செய்தால் அது இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று நினைப்பதாக ராயுடு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement