என்னோட கேரியர் அவரால வீணானதை விட என் இடம் அவருக்கு கிடைச்சத நினச்சா கடுப்பாகுது – ராயுடு ஆதங்க பேட்டி

rayudu 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. குறிப்பாக நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிராக அதன் சொந்த ஊரான அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் முக்கிய நேரத்தில் அதிரடியாக பவுண்டரிகளை பறக்க விட்ட அம்பத்தி ராயுடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியுடன் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Rayudu

- Advertisement -

ஹைதராபாத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி 2013இல் கோப்பையை வெல்லும் அளவுக்கு அசத்தியதால் இந்தியாவுக்காக அறிமுகமானார். இருப்பினும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு அசத்த தவறிய அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் 2015, 2017 ஆகிய வருடங்களில் மும்பை கோப்பையை வெல்வதற்கு விக்கெட் கீப்பராக முக்கிய பங்காற்றினார். அதை விட 2018இல் சென்னை அணிக்காக வாங்கப்பட்டு 602 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்திய அவர் அந்த அணி 3வது கோப்பையை வெல்ல உதவியதால் இந்தியாவுக்காக மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

ராயுடு ஆதங்கம்:
அந்த 2வது வாய்ப்பை இறுக்கமாக பிடிக்கும் அளவுக்கு மொத்தமாக 55 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 1694 ரன்களை 47.06 என்ற நல்ல சராசரியில் குவித்து 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக காத்திருந்த அவரை கடைசி நேரத்தில் கழற்றி விட்ட 4வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்துபவராக இருக்க வேண்டும் என்று கருதிய எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்ந்தெடுத்தது.

rayudu

அதனால் மனமுடைந்த அவர் விரக்தியில் “உலக கோப்பையை பார்க்க 2 முப்பரிமாண கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன்” என்று ட்விட்டரில் விமர்சனத்தை வன்மமாக எடுத்துக்கொண்ட தேர்வுக்குழு உலகக்கோப்பையில் விஜய் சங்கர் காயமடைந்து வெளியேறிய போது ஏற்கனவே அறிவித்தது போல் ரிசர்வ் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராயுடுவை தேர்வு செய்யாமல் மயங் அகர்வாலை இங்கிலாந்து அனுப்பி வைத்து பழி தீர்த்தது. அதன் காரணமாக மேலும் ஏமாற்றமடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

அப்படி வன்மத்தால் சர்வதேச கேரியர் வீழ்த்தப்பட்டாலும் 6 ஐபிஎல் கோப்பைகளை வென்ற வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ராயுடுவை பாராட்டும் வகையில் ஃபைனலில் கோப்பையை அவரது கையால் வாங்கி கேப்டன் தோனி அழகு பார்த்தார். இந்நிலையில் விஜய் சங்கருக்கும் தம்முடைய 2019 உலகக்கோப்பை தேர்வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கும் ராயுடு 2013இல் அறிமுகமான ஆரம்ப காலங்களிலேயே தேர்வுக்குழுவிடம் ஏற்பட்ட பிரச்சனைக்கு சமயம் பார்த்து பழி வாங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Vijay-Shankar

இருப்பினும் தமது இடத்தில் விஜய் சங்கருக்கு பதிலாக ரகானே போன்றவர் விளையாடியிருந்தால் கூட ஆறுதலடைந்திருப்பேன் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2019 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போது நான் விமானத்தில் இருந்தேன். ஐபிஎல் நடைபெற்ற அந்த சமயத்தில் கீழே வந்ததும் அந்த செய்தியை படித்த எனக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்தது. அந்த அணியில் எனக்கு இடம் கிடைக்காது என்று ஏற்கனவே சில அறிகுறிகள் தெரிந்தும் ஒரு ஆல் ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

- Advertisement -

“ஏனெனில் அவர்கள் 4வது இடத்தில் விளையாடுவதற்கு என்னை தயார்படுத்தினர். ஒருவேளை ரகானே போன்றவருக்காக என்னை நீக்கியிருந்தால் கூட நான் ஆதங்கப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் அறிமுகமாகாத ஆல் ரவுண்டரை தேர்வு செய்தது ஏமாற்றத்தை கொடுத்தது. எம்எஸ்கே பிரசாத்தின் 3டி பிளேயர் கமெண்ட் தான் விஜய் சங்கரை பிரபலப்படுத்தியது. அந்த கோபத்தில் முப்பரிமாண கண்ணாடிகள் பற்றி நான் போட்ட ட்விட்டுக்காக அனைவரும் விஜய் சங்கரை கலாய்த்தனர்”

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் புதிதாக வாய்ப்பை பெறவுள்ள – 3 இளம்வீரர்கள்

“ஆனால் அது அவரையோ பிரசாத்தையோ குறிப்பதற்காக போடவில்லை. மாறாக இந்திய அணியின் சுமாரான தேர்வை விமர்சித்தேன். இருப்பினும் யாரும் அதை புரிந்து கொள்ளாமல் விஜய் சங்கரை விமர்சித்தனர். ஆனால் அவருக்கு எதிராக நான் இல்லை. அவரும் நம்மைப் போல் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒருவராக இருந்தார்” என்று கூறினார்.

Advertisement