IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் புதிதாக வாய்ப்பை பெறவுள்ள – 3 இளம்வீரர்கள்

Jaiswal-and-Rinku
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ள உள்ள இந்திய அணியானது ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த சுற்றுப்பயணத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணி ஓய்வில்லாமல் அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

indvswi

- Advertisement -

அதன்படி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த டி20 தொடரில் வாய்ப்பினை பிடிக்கப்போகும் மூன்று வீரர்கள் குறித்த தகவலை இங்கு காணலாம்.

1) ரிங்கு சிங் : இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 474 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியில் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக திகழ்கிறார். அதோடு பின்வரிசையில் பினிஷராக களமிறங்கும் இவர் குஜராத் அணிக்கெதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அதிரடி காட்டியவர் என்பதனால் நிச்சயம் இவருக்கு பினிஷர் ரோலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rinku Singh 2

2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால் : நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்துள்ள ஜெயஸ்வால் துவக்க வீரராக களம் இறங்கி அதிரடி காட்டுபவர் என்பதனாலும் இளம் வீரர் என்பதனாலும் இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

- Advertisement -

அதேபோன்று ஏற்கனவே சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த இவர் நிச்சயம் இந்த டி20 தொடரிலும் வாய்ப்பினை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3) சாய் சுதர்சன் : குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக இளம் வீரரான சாய் சுதர்சன் கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற்றார்.

இதையும் படிங்க : வீடியோ : என்னையவே ஏமாத்த பாக்குறீங்களா? வம்படியாக அம்பயரையே அதிர விட்ட அஸ்வின், நடந்தது என்ன?

அப்படி தனக்கு கிடைத்த இடத்தை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 47 பந்துகளை சந்தித்த அவர் 96 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நிச்சயம் இவருக்கும் இந்திய அணியில் விளையாடும் அனுபவம் வேண்டும் என்பதினால் இந்த தொடரில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

Advertisement