என்ன ஆணவம், நியாயத்தை சொன்ன இந்திய ரசிகர்கள் மீது வன்மத்தை காட்டிய ஆஸி வீராங்கனைகள் – நடந்தது இதோ

Alyssa Healy Australia WOmens
- Advertisement -

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்த காமன்வெல்த் 2022 மகளிர் டி20 கிரிக்கெட்டில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 161/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக பெத் மூனி 61 ரன்களும் , கேப்டன் மெக் லென்னிங் 36 ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய நட்சத்திர தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 22/2 என ஆரம்பத்திலேயே திணறியது.

வெடித்த சர்ச்சை:
இருப்பினும் 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெமிமா 33 ரன்களிலும் அதிரடியாக போராடிய கேப்டன் ஹர்மன்பிரீட் கௌர் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்த வீராங்கனைகள் வழக்கம்போல சொதப்பி வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 118/2 என்ற நல்ல நிலைமையில் இருந்த இந்தியா 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கத்தையும் தாரை வார்த்து வெள்ளியை மட்டுமே வென்றது. அப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிளா மெக்ராத் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் அவர் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் 2 விக்கெட்டுகள் விழுந்தபின் அவர் களமிறங்கியது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் அந்த பாதிப்பை சந்திக்கும் நபர் உடனடியாக அப்போட்டியிலிருந்து விலகி 2 – 3 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை விதியாகும். அதிலும் வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் அந்த பாதிப்பை சந்தித்ததால் ஒட்டுமொத்த ஐபிஎல் 2021 தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நேரத்தில் அந்த பாதிப்பை சந்தித்து விலகியதால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

ரசிகர்கள் கேள்வி:
ஏன் இந்த காமன்வெல்த் தொடரிலேயே தடகளத்தில் பங்கேற்க இருந்த இந்திய வீரர் அந்த பாதிப்பை சந்தித்ததால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அப்படிப்பட்ட பட்ட நிலையில் அதற்கு இந்திய அணி நிர்வாகம் முட்டாள்தனமாக எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவரை விளையாடுவதற்கு ஐசிசி மற்றும் காமன்வெல்த் நிர்வாகம் எப்படி அனுமதித்தது? போன்ற நியாயமான கேள்விகளை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

அதுபோக கடந்த ஜனவரியில் தங்களது நாட்டில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதற்காக நட்சத்திர வீரர் நோவோக் ஜோக்கோவிச்சை பங்கேற்க விடாமல் நாட்டை விட்டு வெளியேற்ற ஆஸ்திரேலியா இந்த விஷயத்தில் தங்களுக்கு வந்தது தக்காளி சட்னியை போல் நடந்து கொண்டதாகவும் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலைமையில் நியாயத்தை கேட்ட இந்திய ரசிகர்களின் கேள்விகளால் எரிச்சலடைந்த ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹேலி தனது நாட்டுக்கு திரும்பியதும் “சால்டி” என்ற பெயருடைய ஒரு படகில் அமர்ந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டு வன்மத்தை காட்டியுள்ளார். அதாவது “அதிகப்படியான உப்பை” போல தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் இந்திய ரசிகர்கள் உப்பு கரிக்கும் வகையில் எரிச்சலாகும் வகையில் பேசுவதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் “என்ன ஆணவம் உண்மையை சொன்னால் கோபத்தை பாரு” என்ற வகையில் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

சப்போர்ட்டுக்கு தங்கை:
அதனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல் அது சம்பந்தமாக பதிவிடவில்லை என்று மற்றொரு ட்வீட் போட்ட அவர் அது உப்புத் தன்மையைக் கொண்ட தண்ணீரில் மிதக்கும் படகை மட்டுமே குறிப்பிடுவதாகவும் அதை விட்டுவிட்டு வேறு எது நினைத்தாலும் அதற்கு நான் பொறுப்பல்ல என்ற வகையில் மீண்டும் வன்மத்தை காட்டினார். அதிலும் “தண்ணீரில் மிதக்கும் வாத்துகள்” என்று மீண்டும் இந்திய ரசிகர்களை அவர் வம்புக்கு இழுத்தார். அதற்கு இந்த காமன்வெல்த் தொடரின் லீக் போட்டியில் ரேணுகா சிங்கிடம் டக் அவுட்டான வீடியோவையும், கடந்த 2021 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டு வளையத்தை மீறும் வகையில் நடந்துகொண்டபோது எதிர்ப்பு தெரிவித்த அதே நாறவாய் அலிசா ஹீலி ட்வீட் உட்பட அவருக்கு தக்க பதிலடிகளை மீண்டும் இந்திய ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

அதனால் கோபமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லென்னிங் தங்கை அண்ணா லென்னிங் “தஹிளா மெக்ராத் வெறும் 2 ரன்களையும் பந்துவீச்சில் 24 ரன்களை வாரி வழங்கி இந்தியாவுக்கு சாதகமாக தானே நடந்து கொண்டார். ஒருவேளை அதுதான் அவர்கள் கடைசி 8 விக்கெட்டுகளை 34 ரன்களுக்குள் இழக்க வைத்து தோல்வியை சந்திக்க காரணமானதா” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு இங்கு வெற்றியைப் பற்றி பேசவில்லை எதைப் பற்றிப் பேசுகிறோம் என்று முதலில் புரிந்துகொண்டு பேசுமாறு இந்திய ரசிகர்கள் மீண்டும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement