- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின் போல திறமை.. ஏபிடி மாதிரி சீக்கிரம் ரிட்டையரான விராட் கோலி தெ.ஆ வரனும்.. ஆலன் டொனால்ட்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற பல பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு விதமான ஃபார்மட்டில் மட்டுமே அசத்துகிறார்கள். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் அசத்தும் விராட் கோலி 83 சதங்கள் 27000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.

அதனால் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ஃபார்மட் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டுமே சச்சின் டெண்டுல்கருக்கு நெருக்கமான திறமையைக் கொண்டிருப்பதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட் கோலி முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சச்சின் போல கோலி:

குறிப்பாக தங்களுடைய நாட்டைச் சேர்ந்த ஏபி டீ வில்லியர்ஸ் போல அவரும் முன்னதாகவே ஓய்வு பெற்றது ஏமாற்றமளிப்பதாக டொனால்ட் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட திறமையான விராட் கோலி தங்களுடைய நாட்டில் நடைபெறும் எஸ்ஏ20 தொடரில் விளையாட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் டொனால்ட் பேசியது பின்வருமாறு.

“சில வருடங்களுக்கு முன் ஹாசிம் அம்லாவுடன் நான் ஒரு அறையில் உட்கார்ந்து பேசினேன். அப்போது சச்சின் டெண்டுல்கருக்கு நெருக்கமாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் அது விராட் கோலியாக இருப்பார் என்று அம்லாவிடம் தெரிவித்தேன். அதைக் கேட்ட அம்லா “எப்படி நீங்கள் அதைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு விராட் கோலியிடம் இருக்கும் வெற்றிக்கான பசியே காரணம் என்று அவரிடம் தெரிவித்தேன்”

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு அழைப்பு:

“விராட் கோலியை போல உயர்மட்ட அளவில் டிரைவ் அடிக்கக்கூடிய வீரரை நான் பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை. விராட் கோலி மேலே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரைப் பற்றி நான் அடிக்கடி பேசுவேன். குறிப்பாக விராட் கோலி ஒரு சாம்பியன் ட்ரைனராக இருப்பதைப் பற்றி பேசுவேன். ஏனென்றால் விராட் அளவுக்கு யாருமே கடினமாக பயிற்சி எடுக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: இன்றைய போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி – விவரம் இதோ

“அந்தளவுக்கு விராட் கோலி ஒரு மெஷின் போன்றவர். உண்மையில் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் மிஸ் செய்கிறேன். கிட்டத்தட்ட ஏபி போல அவரும் கொஞ்சம் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் அவரை நாம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பார்ப்போம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக விரைவில் நாம் (2027) உலகக்கோப்பையில் அவரைப் பார்ப்போம். எஸ்ஏ20 தொடரில் ஒரு சீசனில் விராட் விளையாடுவதைப் பார்ப்பதை விரும்புகிறேன். அது சிறப்பானதாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -