இன்றைய போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி – விவரம் இதோ

Kohli and Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜனவரி 11-ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் வடோதரா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதோடு இந்திய அணியின் பிளேயிங் லெவனையும் அறிவித்தார்.

சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி :

அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணியானது தங்களது முதலில் தங்களது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனின் இடம் பெற்றுள்ள அனுபவ வீரரான விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முன்னாள் இந்திய கேப்டனான சவுரவ் கங்குலியை கடந்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி இன்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்த சவுரவ் கங்குலி இன்று விராட் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார். சவுரவ் கங்குலி இந்திய அணிக்காக 308 சர்வதேச போட்டி ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இவ்வேளையில் இன்றைய போட்டியில் விராட் கோலி பங்கேற்றதன் மூலம் 309-ஆவது ஆட்டத்தில் பங்கேற்று அவரை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் 463 ஆட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : காயமடைந்த ரிஷப் பண்ட்.. கடைசி நேரத்தில் ஒருநாள் அணிக்குள் வந்த துருவ் ஜுரேல் – என்ன நடந்தது?

அவருக்கு அடுத்து முன்னாள் இந்திய கேப்டன்களான எம்.எஸ் தோனி 347 ஆட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 340 ஆட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும், முகமது அசாருதீன் 334 ஆட்டங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement