- Advertisement -
இந்திய கிரிக்கெட்

25 ஆண்டுகால பழைய சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்ட ஆலன் டொனால்டு – அதற்கு டிராவிட் கொடுத்த பக்கா ரிப்ளை

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிடும், வங்கதேச அணியின் பயிற்சியாளராக ஆலன் டொனால்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் தாங்கள் விளையாடிய காலத்தில் மிகச்சிறந்த வீரர்களாக திகழ்ந்தனர்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக டிராவிடும், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக ஆலன் டொனால்டும் இருந்தது நம்மில் பலரும் அறிந்ததே. அந்த வகையில் 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக தற்போது டொனால்ட் டிராவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி அவரை இரவு உணவுக்கு அழைத்துள்ளது தற்போது பெரிய அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 1997-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற ஒரு போட்டியில் டிராவிட் மற்றும் சச்சின் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அந்த ஜோடியை பந்துவீசி பிரிக்க முடியாது என்பதனால் ஸ்லெட்ஜிங் செய்து ஒரு கட்டத்தில் டிராவிடிடம் எல்லை மீறியதாக டொனால்ட் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : டிராவிட் மிகச்சிறந்த ஒரு மனிதர். அவருக்கு எதிராக அந்த போட்டியில் நான் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமான ஒரு நிகழ்வு தான். அதைப்பற்றி நான் இப்போது பெரிதாக பேச விரும்பவில்லை.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் நான் அவரிடம் அத்துமீறிவிட்டேன். அதற்காக அவரிடம் தற்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர் ஆகவே நீங்கள் இதை புரிந்து கொண்டு என்னுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன் என டிராவிடிடம் அவர் வேண்டுகோள் ஒன்றினை முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : எப்பா இத்தனை மீட்டரா? பிரம்மாண்ட சிக்ஸரை பறக்க விட்ட லார்ட் உமேஷ் யாதவை கொண்டாடும் ரசிகர்கள்

அதற்கு பதில் அளித்த டிராவிட் அளிக்கையில் : நிச்சயமாக நான் உங்களுடன் இரவு உணவிற்கு வருகிறேன். ஆனால் நீங்கள் தான் பணம் செலுத்த வேண்டும் என்று ஒரு க்யூட்டான ரிப்ளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by