- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வார்னே மாதிரி.. இந்தியா அவரை ஆஸி தொடருக்கு செலக்ட் பண்ணாதது ஆச்சர்யம்.. ஆலன் பார்டர் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது. அடுத்தபடியாக டிசம்பர் 26ஆம் தேதி நான்காம் வகுப்பு போட்டி துவங்க உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது வழக்கமாகும்.

எனவே அங்கே பெரும்பாலும் ஒரு ஸ்பின்னர் மட்டுமே அணியில் விளையாடுவதும் வழக்கமாகும். அது போன்ற சூழ்நிலையில் இம்முறை ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர் ஆகியோர இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அந்த 3 பேருமே இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடினார்கள்.

- Advertisement -

வார்னே மாதிரி:

இருப்பினும் அந்த மூவருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இதற்கிடையே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் கடைசி 2 போட்டிகளில் ஜடேஜா மற்றும் சுந்தர் மட்டுமே இந்தியாவுக்காக விளையாட உள்ளார்கள். இந்நிலையில் இத்தொடரில் குல்தீப் யாதவ் அல்லது சஹால் இந்திய அணிக்காக விளையாடாதது தமக்கு ஆச்சரியம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்போதெல்லாம் ஷேன் வார்னே போல லெக் ஸ்பின்னர்களை கேப்டன்கள் சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சஹால் அல்லது குல்தீப் யாதவை ஆகியோரை அழைத்து வராதது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஷேன் வார்னே ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வர மாட்டார்”

- Advertisement -

குறைந்த லெக் ஸ்பின்னர்கள்:

“இப்போதெல்லாம் லெக் ஸ்பின்னர்களை கேப்டன்கள் சரியாக பயன்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அவர்களை வார்னே போல சுற்றிலும் வீரர்களை நிற்க வைத்து அட்டாக் செய்ய விரும்புகிறார்கள். இப்போதெல்லாம் 2 ஸ்லிப், கல்லி ஃபீல்டரை நிறுத்தி லெக் ஸ்பின்னரை கேப்டன்கள் கொண்டு வருவதை நான் பார்க்கிறேன். அவர்களிடம் கேப்டன்கள் தடுப்பாட்டத்துடன் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: ஸ்டாரை விட்டுட்டு சரணடைஞ்சு இதை செய்ங்க.. ரன்ஸ் தானா வரும்.. விராட் கோலிக்கு சஞ்சய் பங்கர் அட்வைஸ்

“ஒரு லெக் ஸ்பின்னர் உருவாக நீண்ட காலம் ஆகும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை உங்களின் கேப்டன்ஷிப் கொண்டு வர வேண்டும். விரல் ஸ்பின்னர்கள் இறுக்கமாக இருப்பார்கள். அவர்களிடம் பேட்ஸ்மேன்கள் தாமாக அவுட்டாகும் வரை நீங்கள் காத்திருப்பீர்கள். லெக் ஸ்பின்னர்களின் போக்கு கொஞ்சம் சுமாராக இருக்கும். மிகவும் துல்லியமாக பந்தை சுழற்றுவதால் வார்னே மட்டும் வித்தியாசமானவர். அது நீங்கள் மாஸ்டராக எவ்வளவு கடினமாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது” எனக் கூறினார்.

- Advertisement -