ஸ்டாரை விட்டுட்டு சரணடைஞ்சு இதை செய்ங்க.. ரன்ஸ் தானா வரும்.. விராட் கோலிக்கு சஞ்சய் பங்கர் அட்வைஸ்

Sanjay Bangar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் போட்டியிலேயே சதமடித்தார்.

சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடிய அவர் சதமடித்ததால் இந்தியாவும் எளிதாக வென்றது. ஆனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இலவசமாக ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்தார். அந்த வகையில் இந்திய அணிக்கு மீண்டும் அவர் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டிடம் சரணடைங்க:

இந்நிலையில் நீங்கள் நட்சத்திர பேட்ஸ்மேன் என்பதை மறந்து விட்டு 4வது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டிடம் சரணடைந்து விளையாடுங்கள் என்று விராட் கோலிக்கு முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் பேட்ஸ்மேனாக நீங்கள் உங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம்”

“இந்த விளையாட்டிடம் கொஞ்சம் சரணடைந்து களத்தில் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு எளிதாக உணருங்கள். அப்போது உங்களை உங்களைத் தேடி பவுலர்கள் வருவார்கள். நீங்கள் அவர்களை தேடி செல்லாதீர்கள். அது தான் பெரிய வீரருக்கான அறிகுறி. மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி சிறந்த நினைவுகளை கொண்டுள்ளார். 2014இல் அவர் இங்கே 169 ரன்கள் குவித்த இந்த மைதானத்தில் போட்டியை பார்த்து ரசிகர்கள் வருவார்கள்”

- Advertisement -

பயிற்சியாளர் அட்வைஸ்:

“விராட் கோலி ரசிகர்களுக்கு முன்பு அசத்தக்கூடியவர். எனவே இது அவருக்கான இடம். உங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வையுங்கள். முடிந்தளவுக்கு உங்களுடைய கால்களுக்கு அருகில் நிறைய பந்துகளை எதிர்கொள்ளுங்கள். அதை செய்தால் ரன்கள் தாமாக வரும். விராட் கோலி ரன்கள் அடிக்கவில்லை என்று அர்த்தமில்லை”

இதையும் படிங்க: எல்லாம் விதி.. எனக்கும் தம்பி அஸ்வினுக்கும் சண்டையா? முதல் ஆளா கேட்பேன்.. ஹர்பஜன் பதிலடி

“3 இன்னிங்ஸ் முன்பாகத் தான் அவர் சதமடித்தார். அதற்கு முன்பாக பெங்களூருவில் அவர் நியூசிலாந்துக்கு எதிராக 70 ரன்கள் குவித்தார். எனவே தனது கால்களுக்கு அருகில் பேட்டை வைத்து விளையாடினால் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் அவுட்டானது எல்லாம் தாமாக அழிந்து போகும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். இப்படி பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினாலும் விராட் கோலி தொடர்ந்து தனது வழியிலேயே விளையாடி அவுட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement