- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி யோசிக்க ஒன்னுமே இல்ல.. தனித்துவமான பும்ரா அதுக்கு தகுதியானவர்.. ஆலன் பார்டர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

3வது போட்டியிலும் சுமாராக விளையாடிய இந்தியா மழையின் உதவியுடன் போராடி டிரா செய்தது. இதைத்தொடர்ந்து நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்க உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படுவது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது.

- Advertisement -

யோசிக்க தேவையில்லை:

அதன் காரணமாக பேசாமல் ஜஸ்ப்ரித் பும்ராவே டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கலாம் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பட் கமின்ஸ் போல ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஜஸ்ப்ரித் பும்ரா சிறந்த வேலையை செய்து வருகிறார். பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் தன்னைத்தானே சரியாக பயன்படுத்திக் கொண்டார். கேப்டன்ஷிப் அடிப்படையில் நீங்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு அவர் ஃபீல்டர்களை செட்டிங் செய்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருப்பது மிகவும் கடினம். ஏனெனில் இடைவெளியின் போது நீங்கள் ஃபைன் லெக் பகுதிக்கு செல்ல வேண்டும்”

- Advertisement -

கேப்டன் பும்ரா:

“மிட் ஆன் திசையில் இருந்து கொண்டு ஃபீல்டிங்கை நீங்கள் வழி நடத்த வேண்டும். கேப்டனாக நீங்கள் அதைச் செய்ய முடியாது. ஆனால் பும்ரா அதை சிறப்பாக செய்தார். ஆக்ரோஷமான பவுலரான அவர் ஆக்ரோஷமான மனிதர் கிடையாது. கமின்ஸ் போல அவருடைய முகத்தில் எப்போதும் சிரிப்பையும் கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: வார்னே மாதிரி.. இந்தியா அவரை ஆஸி தொடருக்கு செலக்ட் பண்ணாதது ஆச்சர்யம்.. ஆலன் பார்டர் பேட்டி

“பும்ரா இப்போதெல்லாம் பீடத்தில் இருக்கிறார். அவரது மணிக்கட்டு பந்தை ரிலீஸ் செய்யும் இடம் ஆகியவை மற்ற பவுலர்களை விட வித்தியாசமானது. மிகை நீட்டிப்பு காரணமாக அவர் பந்தை மற்றவர்களை காட்டிலும் கீழே வெளியிடுகிறார். தனித்துவமாக குறைந்த தூரத்தில் ஓடி வந்து வீசும் அவர் ஆச்சரியமாக இருக்கிறார்” என்று கூறினார். இருப்பினும் பும்ரா அவ்வப்போது காயத்தை சந்திக்கும் அபாயத்தை கொண்டிருப்பதால் பிசிசிஐ அவரை கேப்டனாக நியமிக்க யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -