ஆஸ்திரேலியர்கள் அவரை விட லாராவை பெஸ்ட் பிளேயர்ன்னு நெனச்சாங்க.. இந்திய லெஜெண்டை பாராட்டிய தெ.ஆ வீரர்

Ali Bacher 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 90களின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர், ப்ரைன் லாரா, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி போன்ற நிறைய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உருவெடுத்து தங்களுடைய அணியின் வெற்றிக்காக சிறப்பாக விளையாடி இன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளனர். அந்த வீரர்களில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் இரு மடங்கு அபாரமாக செயல்பட்டு வரலாற்றின் மகத்தான வீரராக செயல்பட்டார்.

குறிப்பாக வார்னே முதல் வாசிம் அக்ரம் வரை உலகின் அனைத்து விதமான தரமான பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்ட அவர் 34357 ரன்களையும் 100 சதங்களையும் அடித்து அதிக ரன்கள் மற்றும் சதங்கள் விளாசிய வீரராக சாதனை படைத்தார். அத்துடன் 1998 கோகோ கோலா கோப்பை முதல் 2011 உலகக் கோப்பை வரை இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியர்களின் கணக்கு:
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை விட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் அலி பச்சர் கூறியுள்ளார். இருப்பினும் 4 மில்லியன் மக்கள் முன்னிலையில் விளையாடிய லாராவை விட 1.4 பில்லியன் மக்கள் முன்னிலையில் மிகப்பெரிய அழுத்தத்தில் விளையாடிய சச்சின் தான் தம்மை பொறுத்த வரை மகத்தான வீரர் என்று அலி பச்சர் பாராட்டியுள்ளார்.

1960 – 1970 வரையிலான காலகட்டங்களில் 12 போட்டிகளில் விளையாடிய அலி பச்சர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா ஃபில் லாரி தலைமையிலான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் 4 – 0 என்ற கணக்கில் தெறிக்க விட்டு தோற்கடித்தது. அதன் பின் ஓய்வு பெற்ற அவர் தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் தலைவராக இருந்த நிலையில் தற்போது இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சச்சினுடன் இப்போதும் நான் தொடர்பில் இருக்கிறேன். மிகவும் விசித்திரமான அவர் வேறு கிரகத்தை சேர்ந்தவர். நான் அவருடைய பல சிறந்த இன்னிங்ஸ்களை பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை அவர் ஒரு நபராக எப்படி இருக்கிறார் என்பது முக்கியம். இருப்பினும் அதைப்பற்றி எப்போதாவது வாக்குவாதம் உண்டா? கண்டிப்பாக நான் எப்போதும் நினைத்ததில்லை”

இதையும் படிங்க: இதெல்லாம் 10 – 15 வருஷம் கழிச்சு யாரும் நினைக்க மாட்டாங்க.. 2024இல் அந்த சம்பவம் உறுதி.. ராகுல் பேட்டி

“அவர் மகத்துவம், மகிழ்ச்சி மற்றும் ஆளுமைப்படுத்தப்பட்டவர் என்பது உங்களுக்கு தெரியும். சச்சினை விட பிரைன் லாரா சிறந்தவர் என்று ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதை நான் குப்பை என்று சொல்கிறேன். பிரைன் லாரா 4 மில்லியன் மக்களுக்கு முன்பாக விளையாடினார். ஆனால் இவர் 1.4 பில்லியன் மக்கள் முன்னிலையில் விளையாடினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் எவ்வளவு அழுத்தத்தில் விளையாடியிருப்பார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா” என்று கூறினார்.

Advertisement