டி20 உலகக்கோப்பையில் இந்த 4 அணிகள் தான் செமி பைனல்ஸ்க்கு போகும் – அலெக்ஸ் ஹேல்ஸ் கணிப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. அதோடு இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? எந்த அணிகள் அரையிறுதி சுற்று வரை முன்னேறும் என்பது பற்றி பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Cup

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறப்போகும் நான்கு அணிகள் எவை என்பது குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் அவர் அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் கூறியதாவது :

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பல அணிகள் மிக பலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும் ஆஸ்திரேலியா மைதானம் மற்றும் அங்குள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்தார்.

INDvsENG

அவர் கூறியதில் : தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பெறாதது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் எப்பொழுதுமே பெரிய தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் நியூசிலாந்து அணியை கணக்கில் கொள்ளவில்லை.

- Advertisement -

அதேபோன்று சமீபத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியையும் அவர் தேர்வு செய்யாதது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது இருந்தாலும் அண்மையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நிச்சயம் அரையிறுதிக்கு செல்லும் என்று அவர் கூறிய கருத்தை பலரும் ஒப்புக்கொண்டு உள்ளனர்.

இதையும் படிங்க : டி20 உ.கோப்பையில் எல்லா டீமுக்குமே இவர் ஆபத்தானவராக இருப்பார் – இந்திய வீரரை பாராட்டும் ஆஸி கோச்

கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஜானி பேர்ஸ்டோவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement