- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா ஸ்ட்ராங் டீம் தான்.. ஆனாலும் நான் இந்த வாய்ப்பிற்காக காத்திருக்கேன் – அலெக்ஸ் கேரி சவால்

அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அதன் பிறகு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்திய அணியை எதிர்க்க காத்திருக்கிறேன் :

ஏற்கனவே இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இருமுறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாங்கள் விளையாட இருப்பதாக ஏற்கனவே ஆஸ்திரேலியா வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் பேப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரியும் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டியில் கொண்ட டி20 தொடரை சமன் செய்தது. அதன் பிறகு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கைப்பற்றி நாடு திரும்பியது.

இதன் காரணமாக தற்போது நம்பிக்கை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் காத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் சவுத் வேல்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அலெக்ஸ் கேரி இந்திய அணிக்கு எதிராக தான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

எனக்கு இங்கிலாந்தில் விளையாடும் போது நல்ல ஃபார்ம் இருந்தது. அதனை தொடர்ந்து தற்போதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறேன். எனக்கு தற்போதைய பேட்டிங் ஃபார்ம் திருப்தியாக இருப்பதால் இந்திய அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறேன். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பொறுத்தவரை அங்கு நான் மகிழ்ச்சியுடன் விளையாட இருக்கிறேன்.

இதையும் படிங்க : சிக்ஸ் ஜெனிடிக்ஸ் கூட எப்படி போராடுவது? இந்தியாவையும் எங்க ஆளுங்களையும் பாருங்க.. வங்கதேச கோச் வேதனை

தற்போதைய இந்திய அணி உலகின் எந்த ஒரு கண்டிஷனிலும் சிறப்பாக விளையாடக்கூடிய அணியாக இருந்து வருகிறது. எனவே பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் இந்திய அணி இங்கு வரும்போது அவர்களுக்கு எதிராக என்னுடைய பலத்தை காண்பிப்பேன் என்று சவால் விடும்படி அலெக்ஸ் கேரி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -