சிக்ஸ் ஜெனிடிக்ஸ் கூட எப்படி போராடுவது? இந்தியாவையும் எங்க ஆளுங்களையும் பாருங்க.. வங்கதேச கோச் வேதனை

Nic Pothas
- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தோற்கடித்தது. உடனே இந்தியாவையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று அந்த அணி கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்தார். கடைசியில் டெஸ்ட் தொடரில் டி20 போல விளையாடி வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை வென்று பதிலடி கொடுத்தது.

அதே போல டி20 தொடரிலும் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா சொந்த மண்ணில் எங்களை எளிதாக வீழ்த்த முடியாது என்று வங்கதேசத்துக்கு காண்பித்துள்ளது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நான் நடைபெறுகிறது.

- Advertisement -

ஜீன்ஸ் கூட எப்படி போராடுவது:

இந்நிலையில் இந்தத் தொடரில் மொத்தமாகவே வங்கதேச அணி வெறும் 8 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளது. அதற்குக் காரணம் வங்கதேச வீரர்களின் ஜீன்ஸில் இயற்கையாகவே சிக்சர்கள் அடிக்கும் திறமை குறைவாக இருப்பதாக அதன் துணைப் பயிற்சியாளர் நிக் போதஸ் கூறியுள்ளார். அதனால் யுக்திகளை சொல்லிக் கொடுக்கலாம் ஆனால் ஜெனிட்டிக்ஸ் மரபுகளுடன் எப்படி போராடுவது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி மூன்றாவது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவிடம் வலுவான வீரர்கள் இருக்கின்றனர். நாங்களும் எங்கள் வீரர்களின் வலு மற்றும் கண்டிஷனில் வேலை செய்கிறோம். ஆனால் நீங்கள் ஜெனிடிக்ஸை எதிர்த்து போராட முடியாது. ஒரு வீரர் 95 – 100 கிலோ எடையும் மற்றொரு வீரர் 65 கிலோவும் இருப்பதாக வைத்துக் கொள்வோம்”

- Advertisement -

இந்தியாவை பாருங்க:

“அதில் அதிக எடை கொண்ட வீரர் இயற்கையாகவே பந்தை தூரமாக அடிப்பார். கண்டிப்பாக கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடிப்பதற்கு டைமிங், டெக்னிக் போன்றவை முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அந்த விஷயங்களில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அதே போல உலகின் சிறந்த போட்டி மிகுந்த ஐபிஎல் தொடரையும் நீங்கள் பாருங்கள். ஐபிஎல் தொடரிலிருந்து இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வீரர்கள் வருகிறார்கள்”

இதையும் படிங்க: சொதப்பிய சஞ்சு சாம்சன் 3வது வங்கதேச டி20 போட்டிக்கான இந்திய அணியில் நீக்கப்படுவாரா? கோச் ரியான் பேட்டி

“உண்மையில் இந்தியாவின் சிக்ஸர்கள் அடிக்கும் திறமையுடன் எங்களை ஒப்பிடுவது வெஸ்ட் இண்டீஸ் எத்தனை சிக்ஸ் அடித்தது என்பதை ஒப்பிடுவதற்கு சமமாகும்” என்று கூறினார். முன்னதாக சொந்த மண்ணில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் 140 – 150 ரன்கள் மட்டுமே அடித்துப் பழகிய தங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு இந்தியாவில் 180 ரன்கள் அடிக்க தெரியவில்லை என கேப்டன் சாண்டோவும் முதல் போட்டியின் முடிவில் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement