வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வென்றுள்ளது. அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்துள்ள இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் அந்தப் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு இத்தொடரில் ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பில் தெளிவில்லாமல் விளையாடி முதல் போட்டியில் 29 ரன்களுக்கு அவுட்டான சஞ்சு சாம்சன் 2வது போட்டியில் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
சாம்சன் நீக்கப்படுவாரா:
அதனால் அவருக்குப் பதிலாக 3வது போட்டியில் திலக் வர்மா போன்ற பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் தாங்கள் சொன்ன அணுகு முறையில் அதிரடியாக விளையாட முயற்சித்தே அவுட்டானதாக இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“100% அவர் நாங்கள் விளையாடும் விதத்தின் வழியை காண்பித்தார் என்று நினைக்கிறேன். கான்பூர் டெஸ்ட் போட்டி அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு அணியாக எங்களால் எந்த வரம்பை தொட முடியுமோ அதை தொடுவதற்காக எங்களைத் தள்ள முயற்சிக்கிறோம். அதை செய்வதற்கான தரம் எங்களிடம் இருக்கிறது. அந்த வகையில் முதலிரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் அப்படியே விளையாடினார்”
துணை கோச் பதில்:
“குறிப்பாக குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் அதிரடியான துவக்கத்தைக் கொடுத்து அவுட்டானார். உண்மையில் சஞ்சு சாம்சனுக்கு நிதானமாக விளையாடி பந்துகளை அங்கங்கே அடித்து அரை சதத்தை பதிவு செய்வது எளிது. ஆனால் அவர் பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தார். விளையாட்டின் நிலை அவருக்குத் தெரியும் மற்றும் நாங்கள் அனுப்பிய செய்தியுடன் அது மிகவும் ஒத்துப் போகிறது”
இதையும் படிங்க: இந்தியாவிடம் தோற்றதை அதிர்ஷ்டமா நினைக்கிறோம்.. காரணம் இது தான்.. சவால் விட்ட வங்கதேச கோச் பேட்டி
“எங்களுடைய வீரர்கள் தங்களுடைய சொந்த ஆட்டத்தை விரிவுபடுத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். இந்த வகையில் நாங்கள் அடுத்த 18 மாதங்களில் நடைபெற உள்ள கிரிக்கெட்டின் பெரிய தருணங்களில் முன்னோக்கி விளையாட தயாராகிறோம்” என்று கூறினார். அதனால் சஞ்சு சாம்சன் 3வது போட்டியில் நீக்கப்பட மாட்டார் என்றே ரியான் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக கடைசிப் போட்டியில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படலாம்.



