IND vs AUS : 2வது டெஸ்டில் இந்தியாவை சாய்த்து நிச்சயம் நாங்க நம்பர் ஒன் டீம் என்பதை நிரூப்பிப்போம் – இளம் ஆஸி வீரர் உறுதி

Alex Carey
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியா வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததாக ஸ்டீவ் ஸ்மித், இயன் ஹீலி உள்ளிட்ட அத்தனை இந்நாள் முன்னாள் ஆஸ்திரேலியர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

ஆனால் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணி நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 177, 91 என 2 இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிக்கு மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக 3வது நாள் உணவு இடைவெளியில் களமிறங்கிய அந்த அணி தேநீர் இடைவெளிக்குள் ஆல் அவுட்டாகும் அளவுக்கு படு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது அந்நாட்டவர்களை ஏமாற்றமடைய வைத்தது. மறுபுறம் அதே மைதானத்தில் 400 ரன்கள் குவித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய்யாக்கியது.

கம்பேக் கொடுப்போம்:
அதனால் அவமானத்தை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா இத்தொடரில் அடுத்து வரும் போட்டிகளை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெல்லும் முனைப்புடன் பட் கமின்ஸ் தலைமையான ஆஸ்திரேலிய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் போட்டியில் நிச்சயமாக தங்களது அணி வெற்றி பெற்று 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து கம்பேக் கொடுக்கும் என்று இளம் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி கூறியுள்ளார்.

Aus

இது பற்றி 2வது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மட்டுமே முடிந்துள்ளது. எனவே டெல்லியில் நடைபெறும் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று நிச்சயம் எங்களால் கம்பேக் கொடுக்க முடியும் என்ற நேர்மையான மனநிலையுடன் நாங்கள் உள்ளோம். குறிப்பாக கடந்த 12 – 18 மாதங்களில் செய்ததை அடுத்த போட்டியில் சரியாக செய்து தொடரை சமன் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் நாங்கள் மிகவும் வலுவான அணி என்று நினைக்கிறேன். நாங்கள் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளோம்”

- Advertisement -

“இருப்பினும் துரதிஷ்டவசமாக முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வகுத்த திட்டங்கள் நடைபெறாமல் போனது. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் மீண்டெழுந்து கம்பேக் கொடுக்கும் செய்திகள் எங்களிடம் உள்ளது. மேலும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் அறிவோம். சில சமயங்களில் நீங்கள் மைதான சூழ்நிலைகள் மற்றும் எதிரணியில் உள்ள நட்சத்திரங்களின் வலையில் விழும் நிலைமை ஏற்படலாம்”

Carey

“எனவே அடுத்த முறை களமிறங்கும் போது எங்களுடைய பேட்டிங்கில் சில மாற்றங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அனைவரையும் விட முதல் போட்டியில் நான் எப்படி அவுட்டானேன் என்பதற்கேற்றார் போல் அதிகமாக பயிற்சி எடுத்து வருகிறேன். முதல் போட்டியில் நான் சற்று வித்தியாசமாக விளையாட நினைத்தது தவறாக அமைந்தது என்று நினைக்கிறேன். இருப்பினும் முதல் போட்டி முடிந்து விட்டதால் அதில் செய்த தவறுகள் மோசமானது கிடையாது”

இதையும் படிங்க: இவரை மாதிரி ஒரு ஆல்ரவுண்டர் கெடைக்குறது எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டம் தான் – இந்திய வீரரை புகழ்ந்த டேனிஷ் கனேரியா

“அத்துடன் அடுத்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா – அக்சர் பட்டேல் ஆகியோருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் போட்டியில் அவர்களை நான் சற்று முன்கூட்டியே எதிர்கொண்டேன். ஆனால் இது போன்ற மைதானங்களில் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டும் என்று அவர்கள் எனக்கு படத்தை கற்றுக் கொடுத்தனர்” என கூறினார். இருப்பினும் நாக்பூரை விட அந்த டெல்லியில் காலம் காலமாக சுழல் பந்து வீச்சு அதிகமாக ஈடுபட்டு வருவதால் அதில் எப்படி ஆஸ்திரேலியா வெல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement