எங்களை ஏமாத்திட்டாங்க.. ஆடம் ஜாம்பா அதிருப்தி.. பட் கமின்ஸை ஓப்பனாக சைலண்ட் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்

Adam Zamba
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற சாதனை படைத்துள்ளது. குறிப்பாக சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் வங்கதேசத்தை வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளையும் நாக் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது.

முன்னதாக அப்போட்டியில் அடிக்கடி மழை வந்து ஆப்கானிஸ்தானை சோதித்தது. குறிப்பாக 12வது ஓவரில் மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருந்தது. அதனால் பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்கங்கள் என்று சைகை செய்தார்.

- Advertisement -

ஏமாத்தி ஜெயிச்சுட்டாங்க:
அதை முதல் ஸ்லிப் பகுதியில் பார்த்த குல்பதின் நைப் உடனடியாக தன்னுடைய தொடையில் காயம் ஏற்பட்டது போல் அப்படியே கீழே விழுந்து நடித்தார். அதனால் ஆப்கானிஸ்தான் அணியின் மருத்துவக் குழுவினர் வந்து அவரை சோதித்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் தாமதமாகி மீண்டும் நடைபெற்றது. அத்துடன் உண்மையாக காயமடைந்துள்ளேன் என்பதை நடுவர்களிடம் காட்டுவதற்காக அவர் பெவிலியினில் சென்று அமர்ந்து கொண்டார்.

ஆனால் ஆப்கானிஸ்தான் வென்றதும் அவர் தான் முதல் ஆளாக களத்திற்குள் ஓடி வந்து வெறித்தனமாக வெற்றியை கொண்டாடினார். அதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் போலவே என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இந்நிலையில் குல்பதின் அந்த இடத்தில் வேண்டுமென்றே நடித்து ஏமாற்றி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து விட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த பிரபல ஊடகம் ஃபாக்ஸ் கிரிக்கெட் கடுமையாக விமர்சித்துள்ளது.

- Advertisement -

அதாவது அப்போட்டியில் வங்கதேசம் 13 ஓவர்களுக்கு மேல் வென்றால் ஆஸ்திரேலியா செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு உருவானது. இருப்பினும் குல்பதின் நைப் இது போன்ற மோசமான திட்டத்தை கையிலெடுத்து தங்களை தோற்கடித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. இது போக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பழைய மழைநீர்” என்று பதிவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? ரூல்ஸ் சொல்வது என்ன? – விவரம் இதோ

அதாவது பழைய காலத்து திட்டத்தை பயன்படுத்தி தங்களை குல்பதின் ஏமாற்றியுள்ளதாக ஜாம்பா மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக “செமி ஃபைனலில் ஆஸ்திரேலியா கண்டிப்பாக இருக்கும். மற்ற 3 அணிகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார். தற்போது அவருக்கு ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஜாட்ரான் “பேசாமல் வாயை மூடிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புங்கள்” என்று ட்விட்டரில் விமானம் மற்றும் சைலண்ட் ஸ்மைலியுடன் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement