இவருக்கு திறமைக்கு நிகர் எவரும் இல்லை.! இந்திய வீரரை புகழ்ந்த பாக்கிஸ்தான் நடுவர் அலீம் தர்..!

aleemdar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி யாரிடமும் ஒப்பிட முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார். இவரது திறமையை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது உலகின் தலைசிறந்த நடுவர்களில் ஒருவரான அலீம் தர், கோலியை புகழ்ந்துள்ளார்.

alem-dar

- Advertisement -

கோலி கிரிக்கெட் உலகில் வந்த நாள் முதலே அவரின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக கோலியின் பேட்டிங் திறமை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. பேட்டிங்கில் மட்டுமின்றி உடல ரீதியாக தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறார் கோலி.

சச்சினின் பல சாதனைகளை கோலி கண்டிப்பாக முறியடிக்கும் வாய்ப்பும் அவருக்கு அதிகமாக தான் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தர் கோலியை மிஞ்ச ஆளே இல்லை என்று கோலிக்கு புகழாரம் சூடியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இவர் ஐ சி சி யின் உறிப்பினராகவும் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு கிரிக்கெட் போட்டியில் சிறந்த நடுவர் என்று தொடர்ந்து 3 முறை விருதையும் பெற்றுள்ளார்.

aleem-dar virat

சமீபத்தில் பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து அலீம் தர் தெரிவித்த போது ‘கிரிக்கெட்டின் அனைத்து தரப்பு போட்டிகளிலும் கோலி சிறப்பாக விளையாடுகிறார். அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரின் ஸ்டைலை பல பேர் பின்பற்ற பார்க்கின்றனர். ஆனால், யாரும் அவரின் திறமைக்கு அருகில் கூட வர முடியாது என்று நான் நினைக்கிறன்.’ கூறியுள்ளார். கண்டிப்பாக கோலிக்கு இது போன்ற பாராட்டுகள் அவர் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Advertisement