51க்கு 49 பந்தயம்.. அதைத்தவிர சச்சின் சாதனையை ரூட் உடைப்பதை யாராலும் நிறுத்த முடியாது.. அலெஸ்டர் குக்

Alastair Cook
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார். அதனால் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் உலக சாதனை படைத்துள்ளார். ஆனால் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் அந்த சாதனையை உடைப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் இதுவரை 146 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12500 ரன்களை கடந்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் இன்னும் குறைந்தது 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த 4 வருடங்களில் 3000 – 4000 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரை முந்தி எளிதாக அவர் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

காயம் இல்லனா:

சொல்லப்போனால் முல்தானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதமடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் வாழ்நாள் சாதனையை உடைத்து ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அட்டகாசமாக விளையாடி வரும் ரூட்டை காயம் மட்டுமே தடுக்க முடியும் என்றும் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

மற்றபடி சச்சினை முந்தி ரூட் சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் குக் இது பற்றி பிபிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முந்துவதை என்னால் பார்க்க முடியும். நான் ஓய்வு பெற்ற போது என் சாதனையை அவர் உடைக்க அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கருதினேன். கேப்டன்ஷிப் மட்டுமே அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது”

- Advertisement -

பந்தையம் கட்டுறேன்:

“அப்போது பென் ஸ்டோக்ஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டது ரூட்டுக்கு பெரிய உதவியை செய்தது. இப்போதும் அந்த சாதனையை உடைக்க முடியாது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதற்கு வாய்ப்புள்ளது. அனைத்து மகத்தான வீரர்களும் காயங்களை கடந்து நீண்ட காலம் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல ரூட் கேரியரில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது”

இதையும் படிங்க: இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததற்கு காரணமே இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“ஆனால் அது போன்ற காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும். இருப்பினும் இப்போதும் பசியுடன் விளையாடும் அவர் இன்னும் சில வருடங்கள் இப்படியே விளையாடுவதை நான் பார்ப்பேன். 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும். தற்போதைய நிலையில் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக சச்சின் 51%, ரூட் 49% இருப்பார்கள் என்று சொல்வேன். ஆனாலும் ரூட் அதை உடைப்பார் என்று நான் பந்தையம் கட்டுவேன்” எனக் கூறினார்.

Advertisement