இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததற்கு காரணமே இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே குவாலியர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பேட்டிங்கை தேர்வு செய்தது இதற்காகத்தான் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது டெல்லி மைதானத்தில் அக்டோபர் 9-ஆம் தேதியான இன்று சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் டாசுக்கு பிறகு தான் ஏன் டேட்டிங்கை தேர்வு செய்தேன் என்பது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் முதல் போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.

அதேபோன்று இன்று நான் மைதான ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அந்த சமயத்திலும் நமது அணியின் வீரர்கள் எவ்வாறு பந்து வீசுவார்கள் என்பதை சோதித்து பார்க்கவே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

- Advertisement -

நம்முடைய அணியில் உள்ள வீரர்களின் திறமையை பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அந்த அளவிற்கு திறமையான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். எனவே தனித்தனியாக யாரைப் பற்றியும் பேச முடியாது. ஒரு அணியின் கேப்டனாக நான் சிறந்த வீரர்களை என் அருகில் வைத்திருப்பதால் போட்டியை மகிழ்ச்சியாக அமர்ந்து பார்க்கிறேன்.

இதையும் படிங்க : நிச்சயமாக இந்திய அணிக்காக நான் இதை செய்வேன்.. அர்ஷ்தீப் சிங் அளித்த வாக்குறுதி – விவரம் இதோ

உண்மையிலேயே நமது வீரர்கள் விளையாடும் விதத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதோடு ஒரு கேப்டனாக அவர்கள் சிறப்பாக செயல்படும் போது என்னுடைய வேலையும் குறைகிறது. இந்த மைதானத்தில் நிச்சயம் எங்களால் முதல் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்து வங்கதேச அணியை வீழ்த்த முடியும் என சூரியகுமார் யாதவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement