அவங்களும் மனுஷங்க தான்.. ரோபோ இல்ல.. இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக – அலைஸ்டர் குக் பேசியது என்ன?

Cook
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை அந்த அணி வெற்றியுடன் துவங்கிய வேளையில் அடுத்ததாக மூன்று போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி இந்திய அணியிடம் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை இழந்தது.

கடைசியாக 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது அதற்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் சொந்த மண்ணில் தோல்வியையே சந்திக்காமல் இருந்து வருகிறது. ஆனால் இம்முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்தும் அவர்கள் தற்போது தோல்வியையே சந்தித்து இருக்கின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் கூட்டணியில் அவர்கள் பெற்ற முதல் தோல்வியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து வரும் வேளையில் இங்கிலாந்து அணியை ஆதரித்து முன்னாள் கேப்டனான அலைஸ்டர் குக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு தோல்வியின் போதும் ஊடகங்கள் மோசமான தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் இங்கிலாந்தின் மோசமான செயல்பாட்டை பாதுகாக்க நினைக்கவில்லை.

- Advertisement -

ஆனால் உண்மையில் இது ஒரு மோசமான தொடராக அமைந்துள்ளது. அவர்களும் மனிதர்கள் தான், ரோபோக்கள் அல்ல, தவறு நடக்கத்தான் செய்யும். அவர்கள் எட்டு வாரங்களாக வீட்டில் இருந்து விலகி விளையாடி வருகின்றனர். இந்த மோசமான தோல்வியால் வீரர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். நாம் போட்டியின் எமோஷனை புரிந்து கொள்வதில்லை. வீட்டிலிருந்து டீ சாப்பிட்டுக் கொண்டு எளிதாக விமர்சித்து விடுகிறோம்.

இதையும் படிங்க : இந்தியாவை 500 ரன்களை தொட விடாத இங்கிலாந்து.. ஆண்டர்சன் மாபெரும் உலக சாதனை.. வார்னேவை மிஞ்சிடுவாரு போல

ஆனால் அவர்களின் நிலையை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைத்தையும் மறந்து வீடு வாருங்கள் நாம் மீண்டும் பலமாக எழுவோம் என இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக அலைஸ்டர் குக் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement