இவரால் இந்திய அணியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. இவரை பார்த்தாதவாது பாகிஸ்தான் கத்துக்கணும் – சோயிப் அக்தர் ஓபன் டாக்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கிரிக்கெட் குறித்த பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது பகிரும் பழக்கத்தை உடையவர். இந்நிலையில் தற்போது தனது யூடியூப் சேனலில் இந்திய அணியை ஆதரித்தும், பாகிஸ்தான் அணியை அதனை பின்பற்றவும் கேட்டுக்கொண்டு ஒரு வீடியோ ஒன்றினை அவர் பதிவிட்டுள்ளார்.

ShoaibAkhtar

- Advertisement -

அதில் அவர் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில் : இந்திய அணியை பின்பற்றவும், விராட்கோலி அவரது அணியை வழிநடத்தும் வழிமுறையை பின்பற்றவும் பாகிஸ்தான் அணிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் இந்திய அணியின் வளர்ச்சி அடைவதை நான் காண்கிறேன். பாகிஸ்தானில் ஆக்ரோஷமாக கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு காலம் இருந்தது.

அதனால் நாங்கள் பயப்படாமல் இருந்தோம். மேலும் ஆக்ரோஷமாகவும் களத்தில் சண்டைக்குத் தயாராக இருந்தோம். எங்கள் அணி கேப்டனை இந்திய அணி கேப்டனோடு ஒப்பிடுவோம் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் மிஸ்பா மற்றும் கேப்டனாக இருக்கும் அசார் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியை சிறந்த அணியாக மாற்றுவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும்.

Ind

விராட் கோலி வகுக்கும் பாதையை விட அந்த பாதை சிறப்பாக இருக்க வேண்டும் அதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் கோலி பாராட்டிய அவர் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். விராட் கோலி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் அவரது அணியும் அவரை முழுமையாக பாதுகாக்கிறது. கேப்டன் சுறுசுறுப்பாகவும், தரமாகவும் இருப்பதால் அவரை அப்படியே வீரர்களும் பின்பற்றுகிறார்கள். இதே போன்று நாங்கள் இம்ரான்கான் கேப்டனாக இருக்கும் போது இருந்ததாக உணர்கிறோம்.

ind

மைதானத்திற்கு வந்ததும் வேறு யாருக்கும் செவிசாய்க்காமல் அவருக்கு மட்டுமே செவி சாய்ப்போம் அதேபோன்று கோலி தனது வீரர்களை கட்டுக்குள் வைத்துள்ளார். இதனால் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பாகிஸ்தான் அணி இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறந்த அணியாக மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement