கோலியுடன் இவரை ஒப்பிட வேண்டாம். இவர் மட்டும் இப்போது ஆடியிருந்த 1 லட்சம் ரன்களை விளாசியிருப்பார் – அக்தர் ஓபன் டாக்

Akhtar

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். டெஸ்ட் போட்டிகளை 15,000 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களும் குவித்தவர். கிட்டத்தட்ட அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து , 35 ஆயிரம் ரன்கள் விளாசியுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் 100 சத்தை அடித்து யாரும் தொட முடியாத உயரத்தில் உள்ளார். கிரிக்கெட்டில் இவர் படைக்காத சாதனையே இல்லை எனும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

இவர் ஆடிய காலகட்டத்தில் ஷோயப் அக்தர், ஷேன் வார்னே, பிரட் லீ, மிட்செல் ஜான்சன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், டென்னிஸ் லில்லி, ஷான் பொல்லாக், ஆலன் டொனால்ட், ஷேன் பாண்ட் என பல மிகச்சிறந்த கிரிக்கெட் வரலாற்றின் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இவர்களையெல்லாம் எதிர்த்து ஆடிய சச்சின் டெண்டுல்கர் 35000 ரன்களை குவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்த காலகட்டத்தில் ஆடினால் சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரன்கள் அடித்து விடுவார் என்று தெரிவித்துள்ளார் சோயப் அக்தர். சமீபகாலமாக இந்தியாவையும், சச்சின் டெண்டுல்கரையும் பற்றி அதிகம் புகழ்ந்து வரும் சோயப் அக்தர் கூறியதாவது :

sachin

சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலகட்டம் மிகவும் கடினமானது. அவர் ஆடிய காலகட்டத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இப்போது வாய்ப்பு கிடைத்தால் தற்போது உள்ள விதிகளின்படி கிட்டத்தட்ட 1,30,000 ரன்களை சச்சின் டெண்டுல்கருக்கு அடித்திருபபர். இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கர் தான் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று நான் கூறுவேன் இவ்வாறு கூறியுள்ளார் சோயப் அக்தர்.

- Advertisement -

இதனால் சச்சினை விராட் கோலியுடன் மட்டுமல்ல யாருடனும் ஒப்பிடவேண்டாம் என்றும் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். கோரோனோ ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கியுள்ளதால் தினமும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களை சமூகவலைத்தளம் மூலம் அவர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் தனது யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து தனது கருத்துக்களை அக்தர் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.