பாண்டியா இந்த ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால் ரோஹித்தின் இடம் அவருக்கு தான் – அக்தர் வெளிப்படை

Akhtar
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது இன்றுடன் முடிவு பெறுகிறது. இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அதோடு இந்த போட்டிக்கு முன்னர் மிகச் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு தற்போது இறுதிப் போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது.

GTvsRR

- Advertisement -

மேலும் மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிறைந்துள்ளதால் நிச்சயம் சுவாசத்திற்கு சற்றும் பஞ்சமின்றி இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமான குஜராத் அணி ஹர்டிக் பண்டியா தலைமையில் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இப்படி பாண்டியாவின் தலைமையிலான குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற பாண்டியாவின் சிறப்பான செயல்பாடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதுவரை கேப்டன் செய்யாத அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், மற்றும் கேப்டன்சி என அனைத்து விதத்திலும் சிறப்பாக கைகொடுக்க அந்த அணி தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. மேலும் அவர் முதல்முறையாக கேப்டன்சி பொறுப்பு எடுத்த உடனேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் இந்திய அணியின் அடுத்த கேப்டன்சி பதவிக்கும் அவருக்கு வாய்ப்பு உள்ளதாக சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Hardik Pandya GT

இந்நிலையில் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறுகையில் : இந்தத் தொடர் முழுவதுமே பாண்டியா மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்து வந்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பிற்காக பாண்டியா கதவைத் தட்டும் வாய்ப்பையும் தற்போது கையில் எடுத்துள்ளார். ரோகித் சர்மா இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருப்பார் என்று தெரியவில்லை. எனவே ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்ப கூடிய அடுத்த வீரராக பாண்டியா இருக்கிறார்.

- Advertisement -

அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்படுவதால் அணியின் முதன்மை வீரராக திகழ்ந்து வருகிறார். எனவே நிச்சயம் அவரும் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். ஆனால் அவரது விஷயத்தில் நான் கூறிக் கொள்ளும் ஒரே கருத்து யாதெனில் : அவர் இன்னும் தனது உடற் தகுதியில் நல்ல கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே பாண்டியாவின் மீது இருக்கும் பெரிய குறையாக அவரது பிட்னஸ் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பேட்டை பையில் வைத்துவிட்டு பிரேக் எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு – விராட் கோலிக்கு இங்கிலாந்து கேப்டன் அறிவுரை

அவர் ஒரு ஆல்ரவுண்டராக இருக்கும் பட்சத்தில் பந்து வீசாமல் இருப்பது சரி கிடையாது. எனவே பாண்டியா தனது பிட்னஸ்ஸை மேம்படுத்தி பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சிறப்பான ஒரு வீரராக வலம் வரும் பட்சத்தில் நிச்சயம் ரோகித் சர்மாவின் இடம் அவருக்கு கிடைக்கும் என்று அக்தர் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே பாண்டியா அண்மையில் இந்திய அணியில் இருந்து வெளியேறியதுக்கு காரணம் அவரது பிட்னஸ் தான் என்றும் நிச்சயம் அவரது பிட்னஸை அவர் சரி செய்யும் பட்சத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement