வெங்காயம், தக்காளி எல்லாம் வாங்கலாம் இதை மட்டும் செய்ய மாற்றீங்க ? இந்திய அணிக்கு வேண்டுகோள் வைத்த அக்தர் – விவரம் இதோ

Akhtar
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் கடந்த 2012 – 13 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த இரு நாடுகளும் அதன் பிறகு ஐசிசி போட்டிகளிலும், ஆசிய கோப்பைகளும் விளையாடிக் கொள்கிறதே தவிர ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நேரடி தொடராக விளையாடுவதில்லை இதுகுறித்து தற்போது பேட்டியளித்த அக்தர் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

Pakistan

- Advertisement -

நான் நாம் டேவிஸ் கோப்பை விளையாடலாம், ஒருவருக்கொருவர் கபடி விளையாடலாம் பின்னர் கிரிக்கெட் விளையாடுவதில் மட்டும் என்ன தவறு. இந்தியா பாகிஸ்தானுக்கு வரமுடியாது, பாகிஸ்தான் இந்தியா செல்ல முடியாது என்று எனக்கு புரிகிறது. ஆனால் நாம் பொதுவான இடங்களில் ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற போட்டிகளில் விளையாடுகிறது. விருந்தோம்பலில் மிகச் சிறந்த நாடு இந்தியா.

அதை முதலில் பார்த்து ஷேவாக், கங்குலி, சச்சின் ஆகியோரிடம் கேளுங்கள். நமக்கு இடையிலான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கக்கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் இருநாட்டு தொடரை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாகிஸ்தான் பயணம் செய்ய பாதுகாப்பான இடம். இந்தியாவின் கபடி அணி ஏற்கனவே இங்கு வந்து விளையாடியது அவர்களுக்கு சரியான அன்பும் கிடைத்தது. வங்கதேச அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடியது. அவர்களுக்கும் எந்த கஷ்டமும் இல்லை.

pakisthan

நாம் இரு நாடுகளும் வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவற்றை பரிமாறிக் கொள்கிறோம் மேலும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்கிறோம். அப்படி இருக்க கிரிக்கெட் மட்டும் ஏன் விளையாட முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு அணிகளும் அழுத்தத்தை கைவிட்டு சுமூகமாக இரு நாட்டிலும் விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement