பும்ரா நீண்ட ஆண்டுகள் தாக்கு பிடிக்காமாட்டார். அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு – அக்தர் வீண் பேச்சு

Akhtar

சோயப் அக்தர் சமீபகாலமாக தனது நாட்டு வீரர்களை விட்டுவிட்டு இந்திய நாட்டு வீரர்களின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக மறைமுகமாக விமர்சனங்கள் சொல்வதில் இவர் கில்லாடி சமீபத்தில் கூட சசின் டெண்டுள்கர், சௌரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் போன்றவர்களை மறைமுகமாக இந்திய ரசிகர்களிடம் வாங்கிக் கொண்டதை நாம் பார்த்திருப்போம்.

Akhtar 1

அப்போதும் அடங்காமல் மேலும் மேலும் தனது சேட்டைகளை காட்டி வருகிறார் அக்தர். தற்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பார்த்து தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியுள்ளார். எப்போதும் இந்திய அணி வீரர்களின் தரத்தினை தாழ்த்தி பேசும் அவர் தற்போது உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான பும்ராவையும் தாக்கி பேசியுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா குறித்து அவர் பேசுகையில் : ஜஸ்பிரித் பும்ரா நன்றாகத்தான் பந்து வீசுகிறார். ஆனால் மூன்று விதமான போட்டிகளிலும் அவர் பந்து வீசுவது சற்று அபாயகரமானது.தொடர்ந்து அவரால் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அவரது முதுகு பகுதியை வைத்து தான் அவர் பந்து வீசி கொண்டிருக்கிறார். அதில் ஓரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் அவரது உடம்பு பந்துவீச ஒத்துழைக்காது. அதனால் அவரால் நீண்ட ஆண்டுகள் விளையாட முடியாமல் கூட போகலாம்.

Bumrah

தொடர்ந்து ஒரு டெஸ்ட் போட்டியில் 15 முதல் 20 ஓவர்கள் வீசுவது என்பது கடினமானது. இப்படியே அவர் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்துவீசி கொண்டிருந்தால் ஜஸ்பிரித் பும்ரா இப்படியே இன்னும் சில ஆண்டுகளுக்குள் காணாமல் போய்விடுவார் என்று தெரிவித்துள்ளார் . மேலும் அவரால் மூன்று விதமான போட்டிகளிலும் தொடர்ந்து ஆட முடியாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இவரைப் போன்று தான் இங்கிலாந்து அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரும் இன்னும் சில ஆண்டுகளில் தனது பார்மை இழப்பார் என்றும் அவராலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீச முடியாது என்றும் அவர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.