இந்திய வீரரான இவரை பார்த்து பாக் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – விளாசிய அக்தர்

Akhtar
- Advertisement -

தற்போது (அண்டர் 19) 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினர்.

jaiswal

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அற்புதமாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி படு மோசமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் விக்கெட்டை இழக்காமல் 171 ரன்களை விரட்டி பிடித்து சாதனை படைத்தனர். அபாரமாக ஆடிய இளம் துவக்கவீரர் ஜெய்ஸ்வால் சதம் கண்டார். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியதாவது : இளைஞர் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

jaiswal 1

ஆனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் அளவிற்கு உங்களிடம் முயற்சி இல்லை. இந்திய அணி அதற்கான தகுதியான அணியாக இருந்தது. இந்தியாவின் தொடக்க வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் பார்த்து ஒவ்வொரு பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர் அவர் திறமையும் பின்னால் ஓடினார். தற்போது அவர் பின்னால் பணம் ஓடி வருகிறது. இதை நீங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் சோயப் அக்தர்.

Advertisement