4 பந்துகள் போதும் இவரின் விக்கெட்டை வீழ்த்த. கெத்தாக கூறிய அக்தர். பல்பு கொடுத்த ஐ.சி.சி – விவரம் இதோ

Akhtar

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் என அனைவரும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்கள் மூலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிக்இன்போ இணையதளம் பல்வேறு பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து எந்த ஜோடி ஒருவரை ஒருவர் எதிர்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்ற விவாதத்தை எழுப்பியது.

smith 1

அதில் கோலி vs வார்னே, அன்வர் vs பும்ரா, வில்லியம்சன் vs முரளிதரன், ஸ்மித் vs அக்தர், சச்சின் vs ரஷீத் கான், பாபர் அசாம் vs மெக்ராத், பீட்டர்சன் vs ரபாடா, பாண்டிங் vs ஆர்ச்சர், லாரா vs வாக்னர், டிவில்லியர்ஸ் vs அக்ரம் ஆகிய பத்து ஜோடிகளை புகைப்படமாக பதிவிட்டு இதில் எந்த ஜோடி மோதினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று விவாதத்தை எழுப்பியது.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் ஸ்மித்தை கேலி செய்யும் விதமாக நான் ஸ்மித்தை எளிதாக ஆட்டமிழக்க வைப்பேன். தொடர்ந்து மூன்று முறை அவர்களுக்கு பவுன்சராக வீசினால் நான்காவது பந்தில் அவரே ஆட்டமிழந்து வெளியேறி விடுவார்.

அதனால் 4 பந்தில் என்னால் அவரை ஆட்டம் இழக்க வைக்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கருத்தை கலாய்த்து ஐசிசி பிரபல கூடைப்பந்து வீரர் ஒருவரின் சிரிக்கும் புகைப்படத்தை வைத்து அதெல்லாம் முடியாது என்பதைப்போல ஐ.சி.சி தனது பதிலை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

மேலும் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு பந்துகளுக்கு மேல் வீசினால் நோபால் வழங்கப்படும் என்றும் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் தற்போது அக்தரின் இந்த பதிவிற்கு வழக்கம்போல எதிர்மறை விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் நகைச்சுவைக்காகத்தான் இவ்வாறு கூறி இருப்பார் என்றும் சிலர் அவரை ஆதரித்து வரும் இருக்கத்தான் செய்கிறது.