இந்தியர்கள் எப்போதும் பாகிஸ்தானிடம் இதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். மற்றபடி எதுவும் கிடையாது – அக்தர் ஓபன் டாக்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கமெண்ட்ரீசெய்வது மற்றும் யூட்யூப் பக்கங்களுக்கு பேட்டி கொடுப்பது என கிரிக்கெட் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார்.

Akhtar

- Advertisement -

மேலும் தனக்கென சொந்தமாக ஒரு யூடியூப் சேனலையம் வைத்துள்ளார் அக்தர். அந்த சேனல் மூலம் அடிக்கடி சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் அவர் பேசுவது உண்டு. அவ்வாறு அவர் பேசுவதன் மூலம் சில சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அதாவது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரான அவர் இந்தியாவையும், இந்திய வீரர்களையும் புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி தற்போது சில தினங்களுக்கு முன்னர் சீனர்களையும் அவர்களது உணவு முறை குறித்தும், கரோனா வைரஸ் தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்தார் அக்தர். இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் இந்தியா குறித்து நிறைய பேசி உள்ளார். அதில் அவர் பேசியதாவது :

Indian-Fans

இந்தியா ஒரு நல்ல நாடு. அங்கிருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருப்பவர்கள். அந்த நாட்டு மக்கள் எப்போதும் பாகிஸ்தானுடன் இருக்கும் விரோத போக்கை விரும்பாதவர்கள். போர் அவர்களுக்கு விரும்பத்தகாத ஒரு விஷயமாகும். ஆனால் தொலைக்காட்சியை பார்க்கும்போது நாளையே போர் வந்துவிடும் போல இருக்கும்.

- Advertisement -

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அந்த நாட்டு மக்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர். மேலும் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடந்தே தீர வேண்டும் . கரோனா வைரசால் இந்தியாவிற்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறியுள்ளார் அக்தர்.

fans 2

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அரசியல் ரீதியான பிரச்சனையால் இவ்விரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement