சச்சின் 2003 வேர்ல்ட்கப்ல அடித்த இந்த ஒரு சிக்ஸரை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது – சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின் அடித்த இந்த சிக்சரை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் அதை எப்போதும் ஞாபகம் வைத்து இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் உடனான போட்டி குறித்து நேற்று நேரலையில் பேசிக் கொண்டிருந்தார் அக்தர். அப்போது சச்சினுக்கு எதிராக பந்துவீசிய நினைவலைகள் பலவற்றை பற்றியும் பேசினார். கடந்த 1990 முதல் 2000ம் ஆண்டு வரை இருவருக்கும் இடையே இருந்த போட்டி அலாதியானது, அதிக பரபரப்பாக இருக்கும்.

sachin

- Advertisement -

ரசிகர்களுக்கும் இந்த மோதல் மிகவும் பிடிக்கும். இதில் பல நேரங்களில் சச்சினே வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து அக்தர் கூறுகையில் : சச்சினுக்கு எதிராக நான் பந்து வீசியதை எப்போதும் மறக்க முடியாது. அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரை நான் 13 முறை விக்கெட் வீழ்த்தி உள்ளேன் என்று கூறினார். இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவர் கூறிய தவறான புள்ளி விவரத்தை கண்டுபிடித்து விட்டனர்.

சச்சினை அக்தர் வெறும் 8 முறை மட்டுமே அவுட் ஆக்கி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறையும் விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சச்சினை ஒரே ஒருமுறை விக்கெட் வீழ்த்தியுள்ளார் அவ்வளவுதான்.

அதேபோல் கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அக்தர் வீசிய பந்தை, தேர்ட் மேன் திசையில் லாவகமாக சச்சின் டெண்டுல்கர் சிக்சர் விளாசினார். இந்த சிக்சரை யாராலும் மறக்க முடியாது.

இதுகுறித்து அத்தர் பேசுகையில் : சென்சூரியனில் சச்சின் அடித்த அந்த சிக்சரை இந்திய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இந்த ஒரு சிக்சர் 130 கோடி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது, அப்படி என்றால் ஒவ்வொரு நாளும் அவருக்கு சிக்சரை விட்டுக்கொடுப்பேன் என்று கூறியுள்ளார் அக்தர்.

Advertisement