சச்சின் உட்பட மொத்த இந்தியாவையும் அலறவிட்ட என்னை கதறவிட்ட தமிழக வீரர் – சோயப் அக்தர் ஓபன்டாக்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கிரிக்கெட் உலகில் ஒரு அற்புதமான வேகப்பந்து வீச்சாளர் என்று கூறினால் மிகையாகாது. 90களில் கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் தனது அசுரவேக பந்துகளால் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் என உலகின் எத்தனையோ டாப் பேட்ஸ்மேன்களையும் திணறடித்த பெருமைக்குரியவர்.

பந்து வீசுவதற்காக மைதானத்தின் பவுண்டரி எல்லையின் அருகே இருந்து தனது ஓட்டத்தை துவங்கும் அவர் அதிவேகமாக ஓடி வந்து மின்னல் வேக பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவதில் வல்லவராக திகழ்ந்தார். மேலும் கடந்த 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் போது 161.3 கிலோ மீட்டர் வேகத்திலான பந்தை வீசிய அவர் உலகிலேயே அதிவேகமான கிரிக்கெட் பந்தை வீசிய பவுலராக இன்றும் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்கு சிரமம் கொடுத்த அக்தர்:
அவ்வளவு திறமை வாய்ந்த அவருக்கு அண்டை நாடான இந்தியாவை என்றால் ரொம்பவே பிடிக்கும். அதிலும் அவரின் காலகட்டங்களில் இந்திய அணியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு எதிராக பந்து வீசுவதற்கு அவருக்கு ரொம்பவே பிடிக்கும் என கூறலாம். குறிப்பாக மேற்கூறிய வீரர்களை கண்டால் வேண்டுமென்றே சற்று அதிவேகமான அச்சுறுத்தலான மின்னல்வேக பவுன்சர்களை வீசி கடுப்பேற்றி அவர்களின் விக்கெட்டுகளை பலமுறை எடுத்தார்.

இதில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் அவ்வப்போது அவரின் பந்துகளில் அதிரடியாக ரன்களை குவித்து அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள். இருப்பினும் கூட பல தருணங்களில் அவர்களின் விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் 90களின் இறுதியில் இந்திய ரசிகர்களுக்கு ஒரு பயத்தை அளிக்கக்கூடிய பவுலராக இருந்தார் என்றே கூறலாம். சச்சின் மட்டுமல்லாது அந்த சமயங்களில் இந்திய அணியில் விளையாடி அனைவருக்குமே அவர் தொல்லை அளிக்கக்கூடிய ஒரு தரமான பாகிஸ்தான் பந்து வீச்சாளராக வலம் வந்தார்.

- Advertisement -

அக்தரையே மிரட்டிய தமிழக வீரர்:
கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் ஓய்வு பெற்று தற்போது கிரிக்கெட் வர்ணனைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் உருவாக்கியுள்ள அவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் உன்னிப்பாக கவனித்து அதைப் பற்றிய தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு வீடியோ பதிவில் வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்காக ஒரு கிரிக்கெட் இணையதளத்தில் பணிபுரிந்து வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வியை இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் எழுப்பினார்.

அதை தேர்வுசெய்ய அமித் மிஸ்ரா, மக்காயா நிதினி மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகிய 3 வீரர்களின் பெயரையும் அவர் குறிப்பிட்டார். அதற்கு ஹர்பஜன் சிங் அமித் மிஸ்ரா என தேர்வு செய்ய அது தவறான பதில் என தெரிவித்த சோயப் அக்தர் தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி தான் அதற்கான சரியான பதில் எனக் கூறினார். அந்த தருணத்தில் இந்தியாவுடன் நடந்த ஒரு முக்கிய போட்டியில் இந்திய வீரர்களை அலறவிட்ட தம்மையே மிரட்டிய தமிழக வீரர் லக்ஸ்மிபதி பாலாஜியை பற்றி சோயப் அக்தர் மனம் திறந்து பேசினார்.

- Advertisement -

தெறிக்கவிட்ட பாலாஜி:
அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் எனக்கு எதிராக சச்சின் தடுமாறிக் கொண்டிருந்தார். இந்திய அணியில் இருந்த மற்ற அனைவரும் எனக்கு எதிராக விளையாட முடியாமல் தடுமாறினர்கள். ஆனால் அந்த ஒருவர், பாலாஜி, மட்டும் என்னை தொடர்ந்து சிக்சர்களாக விளசினார். அதுவும் லோயர் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி சரமாரியாக அடித்தார்” என கூறி தனது வியப்பை வெளிப்படுத்தினார்.

அவர் கூறும் அந்த தருணமானது கடந்த 2004ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய போது நடந்ததாகும். குறிப்பாக அந்த தொடரின் ஒருசில போட்டிகளில் 10-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என பாகிஸ்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சோயப் அக்தர் வீசிய பந்துகளில் மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு பாகிஸ்தான் ரசிகர்களை கூட கவர்ந்திழுத்தார்.

இதையும் படிங்க : வீட்ல உக்காந்து ஐபிஎல் பார்ப்பது கடுப்பாகுது. என்னால முடியல – ஆதங்கப்படும் சி.எஸ்.கே வீரர்

அந்த தருணத்தில் பேட் உடையும் அளவுக்கு பாலஜி அதிரடியாக விளையாடினார். இப்போதும்கூட யூடியூப் பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சோயப் அக்தரையே அதிர வைத்த லட்சுமிபதி பாலாஜி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement