நம்ம நிலைமை சரியாகி கிரிக்கெட் போட்டிகள் நடக்க இன்னும் ஒருவருஷம் ஆகும் – புதுக்குண்டை தூக்கி போட்ட பிரபல வீரர்

Ind
- Advertisement -

கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதன்காரணமாக நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் நீண்ட காலத்திற்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது. உலகின் முக்கிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.இதே தொற்று காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

IND-2

- Advertisement -

ஐபிஎல் போன்ற பெரும் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டதால், பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடுத்து எப்போது கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். இந்நிலையில் எப்போது கிரிக்கெட் போட்டி வைக்கலாம் என்பது குறித்து பேசியுள்ளார் சோயப் அக்தர்..

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி நியூசிலாந்தில் தோல்வி அடைந்தது. அப்படி தோல்வி அடைந்தாலும் அது தான் சிறந்த அணி என்று நான் கூறுகிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறந்த நெருக்கடியை இந்திய அணியால் கொடுக்க முடியும். கடந்த முறை சென்று வெற்றி பெற்றது போல இந்த முறையும் வெற்றி பெற வேண்டும்.

Akhtar

ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான தொடர் நடைபெறுமா என்பது சந்தேகம் தான். என்னுடைய மதிப்பீட்டின்படி இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்கு எந்த வித கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறாது என்று நினைக்கிறேன். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெறாது.

- Advertisement -

நாம் இப்போது கரோனாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் கூட்டமாக கூடும் அனைத்து துறைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் தொடர்கள் நடப்பது மிகப்பெரிய சந்தேகம் தான். மேலும் தற்போதைக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் சிலவற்றை நாம் தவிர்த்துதான் ஆகவேண்டும்.

akhtar 4

அதனால் நிலைமை கட்டுக்குள் வரும் வரை நாம் கிரிக்கெட் குறித்து யோசிப்பதே தவறு என்று அக்தர் கூறியுள்ளார். அக்தரின் இந்த கருத்தில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஏனெனில் அனைத்து நாடுகளிலும் நிலைமை சரியாகி அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெற சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement