- Advertisement -
ஐ.பி.எல்

2013இல் ஜடேஜாவின் இடத்தை குறிவைத்து.. 2026இல் சாதித்த ஆகில் ஹொசைன்.. வைரல் ட்வீட்டில் வரவேற்ற சிஎஸ்கே

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அபுதாபியில் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது. அந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகியோரை 28 கோடிக்கு வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதே போல ஆஸ்திரேலியா வீரர் மேத்தியூ ஷார்ட் 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

அதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆக்கில் ஹாசனை சிஎஸ்கே தங்களுடைய முதல் வீரராக வாங்கியது. 32 வயதாகும் அவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னராக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 87 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 293 ரன்கள் ரன்கள் மற்றும் 83 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

2013இல் வைத்த குறி:

உலகம் முழுவதிலும் நடைபெறும் பல்வேறு பிரீமியர் லீக் டி20 தொடர்களில் விளையாடிய அனுபவத்தையும் ஹொசைன் பெற்றுள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் 253 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பேட்டிங்கில் 1096 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில் 237 விக்கெட்டுகளை 7.08 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார்.

அப்படி புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆக்கில் ஹொசைன் ஓரளவு நல்ல வீரராகவே விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட அவர் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை தன்னுடைய ரோல் மாடலாகவும் கொண்டுள்ளார். அது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆக்கில் ஹொசைன் 2013 அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.44 மணிக்கு “ஒரு நாள், நான் ரவீந்திர ஜடேஜாவை போன்ற வீரரை போல் வர விரும்புகிறேன்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

வரவேற்ற சிஎஸ்கே:

அப்போதிலிருந்து கடுமையாக உழைத்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அத்துடன் ஏற்கனவே அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணியின் கிளை அணை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹொசைன் விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட அவர் 2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 315 ரன்ஸ்.. மலேசியாவை ஊதித்தள்ளிய இளம் இந்தியா.. 2வது மெகா சாதனை வெற்றியுடன் செமி ஃபைனல்

தற்போது ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்காக டிரேடிங் முறையில் விளையாடச் சென்றுள்ளார். அதனால் அவரைப் போலவே பேட்டிங், பவுலிங் துறைகளில் அசத்தக்கூடிய திறமையுடைய ஹொசைன் அவரது இடத்திற்கு விளையாட வந்துள்ளார் என்றே சொல்லலாம். இதிலிருந்து ஜடேஜாவை போல் வரவேண்டும் என்று 2013இல் குறிவைத்த ஹொசைன் இன்று அதை நிஜமாக்கியுள்ளார். அவரது 2013 ட்வீட்டை தோண்டி எடுத்துள்ள சிஎஸ்கே அணி “அதை நிகழ்த்தி காட்டுவோம்” என்று அவருக்கு பதிலளித்து வரவேற்றுள்ளது வைரலாகி வருகிறது.

- Advertisement -