சூர்யகுமாருக்கு மாற்று வீரரை தேர்வுசெய்து அறிவித்த மும்பை இந்தியன்ஸ் அணி – புதிய வீரர் யார் தெரியுமா?

sky
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணி பெரிய சறுக்கலை சந்தித்தது என்றே கூறலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரில் எப்போதும் கோப்பையை வெல்லும் என்று அனைவராலும் பார்க்கப்படும் இவ்விரு ஜாம்பவான் அணிகளும் பல தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளது. அதிலும் குறிப்பாக ரோகித் தலைமையிலான மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Mumbai Indians MI

இந்த ஆண்டு அந்த அணியில் இருந்து பல வீரர்கள் விடுவிக்கப்பட்டதாலும் அவர்களுக்கான சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்யவில்லை என்பதும் காரணமாகவும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி இத்தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் ஆரம்பகட்ட போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது பெரிய பாதிப்பாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் கடந்த வாரம் இடதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சியுள்ள தொடரில் இருந்து வெளியேறினார். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் முடிவினை எடுத்திருந்தார்.

akash

தற்போது வரை நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டதால் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் சம்பிரதாயமாக விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளுக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி தற்போது அறிவித்துள்ளது. அந்தவகையில் 28 வயதான உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் என்பவரை மும்பை அணி ஒப்பந்தம் செய்து அணியில் இணைத்துள்ளது.

இதையும் படிங்க : தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு – வெளியான அணி விவரம்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்கவில்லை ஆனால் அவரை ஏற்கனவே மும்பை அணி நெட் பவுலராக இணைத்து அவருக்கு பயிற்சியை வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் சூரியகுமாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மும்பை அணி இவரை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு அணியில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement