தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு – வெளியான அணி விவரம்

Indian Team
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 15-வது ஐபிஎல் தொடரானது வருகிற 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கு விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுடன் தான் களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

INDvsRSA toss

- Advertisement -

அதேபோன்று நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டவுள்ளது.

எனவே ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறுவார். அவரது காயம் குணமடையவில்லை என்றால் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது,

Shikar Dhawan

மேலும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்திய அணியில் இருந்து சமீபகாலமாகவே விலகியிருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை சாஹல், குல்தீப் ஆகியோர் இணைந்து இந்த தொடரில் விளையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளராக உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோரும் அணியில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த மும்பை – சென்னை வெற்றி சகாப்தம் ! எஞ்சியிருக்கும் அந்த ஒரு பரிதாபத்தை பெறப்போவது யார்?

இவர்களை தவிர்த்து கூடுதல் வீரர்களாக ப்ரித்வி ஷா, வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாத்தியா போன்றோரும் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement