நோபால் வேற.. கடைசி மேட்ச் மாதிரி நினச்சேன்.. பும்ரா அந்த ஆலோசனை கொடுத்தாரு.. ஆகாஷ் தீப் பேட்டி

Akash Deep 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே இந்த போட்டியில் வென்றால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் பொறுப்பாக விளையாடிய 302/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நிதானமாக விளையாடி 106* ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அவருடன் களத்தில் ஓலி ராபின்சன் 31* ரன்களுடன் உள்ளார்.

- Advertisement -

அறிமுகத்தில் அசத்தல்:
முன்னதாக இந்த போட்டியில் ஓய்வெடுக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் நோபால் போட்டு தன்னுடைய முதல் விக்கெட்டை பறிகொடுத்த அவர் அதற்காக மனம் தளராமல் அடுத்த சில ஓவர்களிலேயே பென் டக்கெட்டை 11 ரன்களில் காலி செய்து அடுத்ததாக வந்த ஓலி போப்பை டக் அவுட்டாக்கினார்.

அத்துடன் மறுபுறம் 42 ரன்கள் அடித்து சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியை கிளீன் போல்டாக்கிய அவர் 57/3 என இங்கிலாந்து ஆரம்பத்திலேயே திணறும் அளவுக்கு அபாரமாக பந்து வீசி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார். இந்நிலையில் ஒவ்வொரு போட்டியையும் கடைசி போட்டி போல் நினைத்து பந்து வீசுவதாக கூறும் ஆகாஷ் தீப் சர்வதேச கிரிக்கெட்டில் லென்த்தை சற்று இழுத்து வீச வேண்டுமென பும்ரா ஆலோசனை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய பயிற்சியாளர்களிடம் நான் பேசினேன். எனவே அறிமுகப் போட்டியை முன்னிட்டு நான் பதற்றமடையவில்லை. ஒவ்வொரு போட்டியையும் என்னுடைய கடைசி போட்டியாக நினைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் லென்த்தை இழுத்து வீச வேண்டும் என பும்ரா பாய் ஆலோசனை கொடுத்தார்”

இதையும் படிங்க: 1000 ரன்ஸ் 100 விக்கெட்ஸ்.. இங்கிலாந்துடன் சேர்ந்து ஆஸியையும் திணறடிக்கும் அஸ்வின்.. தனித்துவமான இரட்டை சாதனை

“அதைத்தான் இப்போட்டியில் நான் அப்படியே செய்தேன். நோ பால் வீசியதற்காக நான் மோசமாக உணர்ந்தேன். குறிப்பாக ஜாக் கிராவ்லி சிறப்பாக பேட்டிங் செய்ததால் அது அணியை பாதித்து விடக்கூடாது என்று நினைத்தேன். ஆரம்பத்தில் பிட்ச்சில் கொஞ்சம் உதவி கிடைத்தது. அதே சமயம் பந்து மிருதுவாகவும் பிட்ச் மெதுவாகவும் இருந்தது. நாங்கள் முடிந்தளவுக்கு நெருக்கமாகவும் சரியான இடங்களிலும் பந்து வீச முயற்சித்து வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement