
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்த பாக்சிங் டே போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதனால் இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல கடைசி 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டுய கட்டாயத்தில் இருக்கும் வேளையில் இந்திய அணிக்கு இந்த போட்டி மிக முக்கியம் என்பதால் இந்த போட்டி உச்சகட்ட சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக ஏற்கனவே அங்கு சென்றடைந்த இந்திய அணி தீவிர வலைபயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வலைப்பயிற்சியின் போது பேட்டிங் பயிற்சி எடுத்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் காயத்தை சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வலைப்பயிற்சியின் போது பந்து தாக்கியதால் காயம் அடைந்தவர் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடி பின்னர் மீண்டும் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க 11-ஆவது வீரராக களமிறங்கிய அவர் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். அவரது அதிரடியால் இந்திய அணி பாலோ-ஆனில் இருந்து தப்பியது. அதனை தொடர்ந்து நான்காவது போட்டியிலும் அவர் இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : கபில் தேவின் 33 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் நூலிழையில் இருக்கும் பும்ரா – விவரம் இதோ
இவ்வேளையில் வலைப்பயிற்சியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அவரது காயம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது.