ஆயுஷ் மாத்ரே வேணாம்.. ருதுராஜுக்கு பதிலாக அந்த அதிரடி வீரரை கொண்டு வாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

Akash Chopra and Ruturaj
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து கடந்து சில தினங்களுக்கு முன்னர் வெளியேறினார். அவரது தலைமையில் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை அணி முதல் 5 போட்டிகளில் விளையாடி நான்கு தோல்விகளை பெற்று பரிதாப நிலையை சந்தித்தது.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலா அந்த வீரரை வாங்கியிருக்கலாம் : ஆகாஷ் சோப்ரா

அதன்பிறகு மீண்டும் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இப்படி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியல் பட்டியலில் பின்தங்கியிருக்கும் சிஎஸ்கே அணியானது தோனியின் தலைமையிலாவது மீண்டுவருமென்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தோனியின் தலைமையில் கொல்கத்தா அணிக்கு எதிராக மாபெரும் தோல்வியை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சி.எஸ்.கே அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக மும்பையை சேர்ந்த 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவரது இந்த சேர்க்கை சென்னை அணிக்கு எந்த அளவிற்கு பலன் அளிக்கப்போகிறது என்பது புரியாத புதிராக இருக்கும் வேளையில் ஆயுஷ் மாத்ரேவிற்கு பதிலாக காயமடைந்த ருதுராஜுக்கு மாற்றுவீரராக பிரித்வி ஷாவை கொண்டு வந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதுள்ள சிஎஸ்கே அணியை பார்க்கையில் பல பலவீனங்கள் தெரிகின்றன. தோனி வந்தால் பிரச்சனை தீரும் என்று பார்த்தால் தோனி வந்தும் எந்த பிரச்சனையும் தீர்ந்தபாடில்லை. என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அவர்களது ஸ்டைலை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே ஷேக் ரஷீதை அணிக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோன்று ருதுராஜுன் இடத்திற்கு பிரித்வி ஷாவை வாங்கி இருந்தால் அது சரியான ஒன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : லக்னோ அணியில் இணையும் அதிவேகப்புயல்.. தேசிய கிரிக்கெட் அகாடெமி காண்பித்த – கிரீன் சிக்னல்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஜடேஜா பேட்டிங் வரிசையில் மிகவும் கீழே இறங்குகிறார். அதனை தவிர்த்து அவர் நான்காவது வீரராக களம் இறங்கினால் இன்னும் சிறப்பாக இன்னிங்சை கட்டமைக்க முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement