இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனானது வரும் மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
லக்னோ அணி இம்முறை செம ஸ்ட்ராங் : ஆகாஷ் சோப்ரா
இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்பட்டதால் 10 அணிகளிலும் வீரர்களின் அணி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான லக்னோ அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதாக முன்னணி அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் தற்போதைய லக்னோ அணியில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரான், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்கள் இணைந்துள்ளனர். அதுமட்டும் இன்றி சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாக கையாளும் அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம்.
அவர்கள் நிச்சயம் மிடில் ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுவார்கள் என்பதனால் லக்னோ அணி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் ரன்களை குவிக்கும். அதேபோன்று பந்துவீச்சு துறையிலும் மாயங்க் யாதவ், மோசின் கான், ஆகாஷ் தீப் மற்றும் ஆவேஷ் கான் போன்ற இளமையான வீரர்கள் இருப்பதினால் நிச்சயம் அந்த அணி பந்து வீச்சிலும் பிரகாசிக்கும்.
இதையும் படிங்க : இப்போதைக்கு உலகின் நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னர் அவர்தான்.. அதுதான் உண்மை – யுஸ்வேந்திர சாஹல் கருத்து
அதோடு இந்த ஆண்டு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் அந்த அணியை கேப்டனாக வழி நடத்தப்போவது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தையும் கொடுக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



