தோனியோட அந்த பெருமையை சஞ்சு சம்சனால் காப்பாற்ற முடியும்.. சி.எஸ்.கே வின் முடிவு சரிதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra and Samson
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு இடம்மாறுவது குறித்தே பலரும் பேசி வருகின்றனர். ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீது அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு இடம்மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதோடு சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வரவிருப்பது குறித்த வலைதளப்பதிவு ஒன்றும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

தோனியின் பெருமையை சாம்சனால் காப்பாற்ற முடியும் : ஆகாஷ் சோப்ரா

அப்படி சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு இடம் மாறினால் அது நல்லது தான் என சிஎஸ்கே ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரியான் பராக்கின் நெருங்கிய உறவினர் ஒருவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருப்பதால் அவரை அடுத்த கேப்டனாக்க முயற்சி செய்கிறார் என்ற பேச்சு இருந்து வந்தது.

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணியில் நீடிக்க விருப்பம் இல்லாத சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேறி மற்றொரு அணிக்கு இடம்மாறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த சி.எஸ்.கே அணியின் நிர்வாகி ஒருவர் :

சஞ்சு சாம்சன் வேறொரு அணிக்கு இடமாறுகிறார் என்றால் அவரை வாங்குவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை என்று கூறியிருப்பதால் சிஎஸ்கே அணியின் நிர்வாகமும் சஞ்சு சாம்சனை ஏற்க தயாராக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வந்தால் நிச்சயம் அது அந்த அணிக்கு நல்லது தான்.

- Advertisement -

ஏனெனில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு என்று ஒரு மிகப்பெரிய லெகசி இருக்கிறது. அவரது அந்த லெகசி பெருமையை காப்பாற்றும் தகுதி சஞ்சு சாம்சனிடம் இருப்பதாக உணர்கிறேன். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் சாம்சன் துவக்க வீரராகவும் விளையாடுவதால் அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு கை கொடுக்கும். எனவே அவரை சிஎஸ்கே அணி வாங்கினால் அது நல்ல தேர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நெருப்புடன் நெருப்பாக மோத குல்தீப் வேணும்.. அதுக்கு பயந்துகிட்டு பும்ராவை விடாதீங்க.. இயன் பெல் அறிவுரை

கடந்த மெகா ஏலத்தின் போது 18 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட சாம்சன் சிஎஸ்கே அணிக்கு இடம்மாற வேண்டுமெனில் அதே மதிப்புடைய வீரரை ராஜஸ்தான் அணிக்கு கொடுக்க வேண்டும். இரு அணிகளுமே இந்த விடயத்தில் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த இடமாற்றம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement