இவர் ஆர்.சி.பி அணியில் இல்லாத வரைக்கும் அவங்களுக்கு நல்லதுதான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்தது. நேற்றைய போட்டியில் கோலி, படிக்கல் சரியாக விளையாடாத வேளையில் பட்டிதர் மிக அற்புதமாக விளையாடி 22 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அதேபோல நேற்று டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.

ABD

- Advertisement -

ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 150 ரன்கள் குவிக்குமா என்று கேள்வி எழுந்த நிலையில், டிவில்லியர்ஸ் அற்புதமாக விளையாடி 171 ரன்களுக்கு அணியை கொண்டு சென்றார். அதன் பின்னர் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் மட்டும் தான் குவித்தது. டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 58 ரன்களும், ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். இருப்பினும் இறுதியில் அந்த அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. நேற்றைய வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது உள்ளது.

நேற்றைய போட்டியில் கிறிஸ்டியனுக்கு பதிலாக டேனியல் சேம்ஸ் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் உண்மையில் ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். இவருக்கு இனி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். இவரால் நன்றாக பந்துவீசும் முடியும். அதேபோல் இறுதி ஓவர்களில் நின்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நன்றாக ரன்கள் குவித்து தர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Patidar

அதேபோல நேற்றைய போட்டியில் இன்னொரு மாற்றமாக நவ்தீப் சைனி இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பட்டிதர் களமிறங்கினார். அவர் நேற்றைய போட்டியில் மிக அற்புதமாக விளையாடி, அவரது திறமையை அனைவருக்கும் அவர் நிரூபித்து விட்டார். எனவே இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அவரை நிச்சயமாக பெங்களூரு அணி ஆட வைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.

Saini

இவர் ஆடுவதன் மூலம் பெங்களூரு அணிக்கு பேட்டிங்கில் கூடுதலாக பலம் கிடைக்கும் என்றும், இனிவரும் அனைத்து போட்டிகளிலும் இவர் நிச்சயமாக ஆட வேண்டும் என்றும், நவ்தீப் சைனியை இனி எந்த போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டாம் என்றும் ஆகாஷ் சோப்ரா இறுதியாக தனது கருத்துக்களை கூறி முடித்தார்.

Advertisement